Primary Menu

Top Menu

July 20, 18

சண்முக பாண்டியன் படத்தை தயாரிக்க நடிகர் விஜய் ரெடி

நடிகர் விஜயகாந்த்தின் அரசியல் வாழ்வு தொடங்கிய பின்னர் படங்களில் நடிப்பதை அவர் விட்டுவிட்டார். ஆனால் அவரது மகன் சண்முக பாண்டியன் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

ஆனால் அவருக்கு மக்களிடம் எதிர்ப்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காததால், அவருக்கு உதவும் வகையில் இளைய தளபதி விஜய் தனது சொந்த செலவில் அவரை வைத்து ஓர் படத்தினை தயாரிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக பல இளம் இயக்குனர்களிடம் விஜய், கதை கேட்டுவருகிறார். அவருக்கு தான் என நினைத்து ஆவலுடன் கதை சொல்ல வந்த இயக்குனர்கள் பலரும், விஜய்க்காக அவர் கதை கேட்கவில்லை என தெரிந்ததும் பின்வாங்கி இருக்கின்றனர். ஆனால் விஜய் கதை ஓகே ஆனதும் சற்றும் தாமதிக்காமல் விரைவில் படத்தினை தொடங்க ஆர்வமாகவுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

இளைய தளபதி விஜய்யின் 44வது பிறந்தநாள் 22ம் தேதி வருகிற நிலையில் அவரின் பிறந்தநாளை கொண்டாட 100 நாட்களுக்கு முன்பே ரசிகர்கள் தயாராகிவிட்டனர். டுவிட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டிருந்தாலும் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என விஜய் முடிவு செய்துள்ளாராம்.

சாமி 2 பாடல்கள் வெளியீடு!

ஹரி இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு விக்ரம்...

Leave a Reply