Primary Menu

Top Menu

September 21, 18

தொடர் நிகழ்வாக செல்லூர் கண்மாயில் பனை விதை நடும் நிகழ்வு

இன்று 16.09.2018 மாலை மதுரை செல்லூர் கண்மாய் பகுதிகளில் பனை விதை நடும் நிகழ்வு நடத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு முன்னிலை வகித்து தொடங்கி வைத்தவர் பேராசிரியர் முனைவர் சு.நாகரத்தினம் அவர்கள்.

இந்நிகழ்வினை ஒருங்கிணைத்தவர் நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கத்தைச் சார்ந்த அபூபக்கர். மேலும் இதில் கலந்துகொண்டு பனை விதை நட்டு வைத்தவர்கள் “கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம்” மற்றும் “வைகை நகர் இளைஞரணி” இயக்கத்தினர்.

இந்த பனை விதை நடும் நிகழ்விற்கு வந்து கலந்துகொண்ட அனைவருக்கும் பொது மக்களுக்கும் பனை விதைகள் நடும் காரணம் பற்றியும் பனை மரத்தின் பயன்களை பற்றியும் விளக்கமாக எடுத்துக் கூறினார் பேராசிரியர் நாகரத்தினம் அவர்கள். இந்நிகழ்வில் கலந்து கொண்டு வந்தவர்கள் அனைவரையும் வாழ்த்தி பாராட்டி வரவேற்று நிகழ்வு முடிந்ததும் நன்றி கூறினார் “நேச்சர் செக்யூர் பவுண்டேஷன்” அமைப்பின் நிறுவனர் செல்வம் ராமசாமி. அப்பகுதி மக்கள் பனை விதை நடும் நிகழ்வினை ஆர்வத்துடன் கண்டு சென்றனர்.

Comments

மதுரையினு சொன்னா நினைவுக்கு வரும் சிறப்புகள் !!

மதுரை வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon