Primary Menu

Top Menu

October 16, 18

தொழில் தொடங்குவோர் எண்ணிக்கை அதிகரிப்பு – பிரதமர் மோடி

இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கும், நடத்துவதற்கும் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளதால் சுயதொழில் தொடங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனில் 2 நாள் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான முதலீட்டாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

 

முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:-

 

இந்தியாவில் தொழில் நடத்துவதற்கான நடைமுறைகள் எளிமை ஆக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கும், நடத்துவதற்கும் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளதால், சுயதொழில் தொடங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

 

நாட்டில் வரி கட்டமைப்பை நாங்கள் மேம்படுத்தி உள்ளோம். திவால் சட்டத்தின் மூலம் நாட்டில் தொழில் செய்வது எளிமையாகி உள்ளது. வங்கி அமைப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

 

ஆற்றல், கொள்கை, செயல் திறன் ஆகியவையே வளர்ச்சியின் தாரக மந்திரம்.

 

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

 

முன்னதாக, மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி அங்கு அமைக்கப்பட்டுள்ள பல்வேறு நிறுவனங்களின் கண்காட்சியை சுற்றிப்பார்த்தார்.

 

முன்னதாக, அரங்கில் மத்திய திரைப்பட தணிக்கைத் துறை சார்பில் பல்துறை வளர்ச்சி தொடர்பான வீடியோ ஒளிபரப்பப்பட்டது. இதனை மோடி ரசித்துப் பார்த்தார்.

 

முதலீட்டாளர் மாநாட்டில் இதன்மூலம் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும் என அம்மாநில அரசு எதிர்பார்க்கிறது.

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon