சீன பிரதமர் ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திரமோடி வருகின்ற அக்டோபர் 11ம் தேதி சென்னை வருகை தர இருக்கின்றனர். இவர்களின் வருகையை ஒட்டி மாமல்லபுரம் பொதுமக்களின் பார்வைத்தளங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது.
வருகின்ற அக்டோபர் 11ம் தேதி சீன அதிபர் ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திரமோடி சென்னை வருகை தரவுள்ளனர். அதன்பிறகு அக்டோபர் 12, 13ம் தேதிகளில் மாமல்லபுரத்தில் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களை சந்தித்து பேசுகின்றனர். அதன்பிறகு அர்ஜுனன் தபசு, பட்டர்பால், கடற்கரை கோவில், ஐந்துரதம் ஆகிய இடங்களை சுற்றிப் பார்க்கின்றனர்.
தற்போது மாமல்லபுரத்தை அழகுபடுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மாமல்லபுரத்தை சுற்றி மரக்கன்றுகள், புல்வெளிகள் நடப்படுகின்றன. அங்குள்ள சிலைகளுக்கு வண்ணம் பூசப்படுகின்றன. நகர்முழுவதும் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு காரணங்களுக்காக மாமல்லபுரம் சுற்றுலா தளங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். புராண இடங்கள் அனைத்தும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளன.