Primary Menu

Top Menu

September 22, 18

சவுதி அரேபியாவில் பெண்கள் விமானம் ஓட்டுவதற்கு அனுமதி

முதன் முறையாக சவுதி அரேபியாவில் விமானம் ஓட்ட போகும் பெண்கள் . 1000க்கும் அதிகமான பெண்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

சவுதி உள்ளிட்ட அரபு நாடுகளில்  பெண்களுக்கு அந்த நாடுகளில் பெரிய அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சவுதியின் முடி இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றதில் இருந்து அங்கு நிறைய மாற்றங்கள் கொண்டு வருகிறார். முக்கியமாக பெண்களுக்கு ஆதரவாக நிறைய மாற்றங்கள் கொண்டு வந்தார்.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்கப்பட்டது. 2018ல் இருந்து பெண்கள் கார் ஓட்டலாம் என்று அவர் அறிவித்தார். பலரும் அவரின் இந்த முடிவுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

பொதுவாக சவுதி விமானங்களில் சவுதி பெண்கள் பணியாற்ற மாட்டார்கள். பிலிப்பைன்ஸில் இருந்து இதற்காக பெண்கள் பணிக்கு அழைத்து வரப்படுவார்கள்.   படித்த சவுதி பெண்கள் கூட அங்கு விமானியாக பணியாற்றியது இல்லை. இந்த நிலையில்தான் தற்போது பெண்கள் சவுதி அரேபியாவில் விமானம் ஓட்டுவதற்கு அதிக அளவில் முன்வந்து இருக்கிறார்கள்.

ரியாத்தை சேர்ந்த் ஃபிளைநாஸ் என்ற விமான நிறுவனம் தங்கள் விமானத்தில் பணியாற்ற சவுதியை சேர்ந்த பெண் துணை பைலட்டுகளையும், பெண் பணியாளர்களையும் அழைத்து இருக்கிறது. இந்த நிலையில் துணை பைலட்டுகளாக பணியாற்ற மட்டும் சவுதியில் தற்போது 1000க்கும் அதிகமான பெண்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். தொடர்ந்து விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது. அடுத்த மாதம் அங்கு முதல் பெண் துணை விமானி ஒருவர் பறப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
Comments

நடிகரை ஹோட்டல் அறைக்கு வரச்சொன்ன மைனா படநடிகை!

அமலாபால், விதார்த் நடிப்பில் கடந்த 2010ல்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon