Primary Menu

Top Menu

July 16, 18

‘சர்க்கார்’ பர்ஸ்ட்லுக் : தளபதி விஜய் மேல் மீண்டும் வழக்கு

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘சர்கார்’ படத்தின் போஸ்டர்களில் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது. அதற்கு பலவித எதிர்ப்புகள் எழுந்ததையடுத்து அந்த போஸ்ட்டரினை படத்தின் தயாரிப்பு நிறுவனம் நீக்கியது.

இந்த நிலையில், சர்கார் படத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அதில் சர்கார் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் புகைப்பிடிக்கும் காட்சியை விளம்பரப்படுத்தியதாக படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பு நிறுவனம் சென்னை அடையார் புற்றுநோய் மையத்திற்கு தலா ரூ.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகள், நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த விவகாரம் குறித்து இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

வைரலாகும் சர்கார் படத்தில் யோகி பாபுவின் புதிய கெட்-அப்!

சர்கார் படத்தில் நடிக்கும் யோகி பாபுவின்...

Leave a Reply