Primary Menu

Top Menu

September 20, 18

“சர்கார்” ஆடியோ வெளியீடு : லைவாக பாடப்போகும் ஏ.ஆர்.ரகுமான்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் “சர்கார்”. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இப்படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் ட்ரைலர் மற்றும் ஆடியோ எப்போது ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் செப்டம்பர் மாதம் இப்படத்தின் ஆடியோ வெளியீடு பிரமாண்டமாக நடக்கப்போவதாகவும் அதில் ஏ.ஆர்.ரகுமான் லைவாக பாடப்போவதாகவும் கூறப்படுகிறது.

“சர்க்கார்” படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்துவருகிறது. இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் படக்குழுவினர் யு.எஸ்.ஏ செல்ல இருப்பதாக கூறப்படுகிறது . அங்கு 10 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அதன் பின்னர் சென்னையில் சில காட்சிகள் படமாக்கப்பட்ட பின்னர் படப்பிடிப்பு முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

ஐஏஆர்ஏ’ என்ற சர்வதேச விருதுக்கு நடிகர் விஜய் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். மெர்சல் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் மற்றும் சர்வதேச சிறந்த நடிகர் என இரு பிரிவுகளில் விஜய் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அதற்காக இணையதளத்தில் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் நடிகர் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon