Primary Menu

Top Menu

September 25, 18

சமயநல்லூர் பகுதி தோடனேரி கண்மாயில் பனைவிதை நடும் நிகழ்வு

மதுரை சமயநல்லூர் தோடனேரி கண்மாயில் பனைவிதை நடும் நிகழ்வு கடந்து ஞாயிறு காலை 10 மணியளவில் தொடங்கி நடந்தது.
.
இந்நிகழ்வினை #சுழியம் அமைப்பினைச் சேர்ந்த திரு.சுருளி, திரு.அழகுராஜா, திரு.தர்மராஜ் ஆகியோர் அப்பகுதி நண்பர்களுடன் சேர்ந்து ஒருங்கிணைத்து இருந்தனர்.
.
பல இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு தோடனேரி கண்மாய்க் கரைகளை சுற்றியும் சுமார் 600 பனைவிதைகளை நட்டு வைத்தனர்.
.
சிறப்பு விருந்தினராக முனைவர் பேராசிரியர் திரு.சு.நாகரத்தினம் அவர்கள் வந்திருந்து பனை மரத்தின் வரலாற்றையும் அது நம்முடன் கொண்ட வாழ்வியல் பன்பாட்டையும் பனையால் விளையும் நன்மைகளையும் எடுத்துக்கூறியதோடு ப்ளாஸ்டிக் பொருட்களின் மாற்றாக பனை மரப் பொருட்களை பயன்படுத்தி இயற்கை சூழலை காக்கலாம் என்று உரையாற்றினார்.
.
திருநகர் பகுதியில் பல சமூக செயல்பாட்டில் இயங்கி வரும் திரு. வி.மதன்குமார் தனது நண்பர்களுடன் வந்திருந்து பனைவிதைகளை நட்டுச் சென்றார்.
.
கவிஞர் திரு.சென்றாயன் இந்த சமூகப்பணியை தொடங்கிய சுழியம் அமைப்பினரை பாராட்டிப் பேசினார்.
.
செல்லூர் பகுதியைச் சேர்ந்த “நேச்சர் செக்யூர் பவுண்டேசன்” அமைப்பின் நிறுவனர் திரு.செல்வம் ராமசாமி அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
.
தொடர்ந்து நிகழ்ந்து வரும் இவ்வரிய பனைவிதை நடும் சமூகப்பணியினை கிராமத்தாரும் மற்றும் பொதுமக்களும் பாராட்டினர்.

Comments

அறுபதாம் வயதில் அறுபது பனைவிதை நடவு !

மதுரையில் பனைமர விதைகள் நட்டு வைத்து...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon