Primary Menu

Top Menu

July 21, 18

ராயல் என்பீல்டு நிறுவனம் 500 பெகாசஸ் மோட்டார் சைக்கிளை தயாரிக்க முடிவு

உலகப் போர் கண்ட பெருமை ராயல் என்பீல்டுக்கு உண்டு. எதிரி படை அணிவகுப்புக்கு முன்பாக விமான படை மூலம் எடுத்துச் செல்லப்பட்ட ஒரே மோட்டார் சைக்கிளும் இதுவே!

போரின்போது 4 ஆயிரம் மோட்டார் சைக்கிள்கள் பயன்படுத்தப்பட்டன. அப்போது தயாரான பிளையிங் ஃபிளீ இரண்டு ஸ்டிரோக் இன்ஜினை கொண்டது. 125 சிசி திறனுள்ளதாக வந்தது.

பிளையிங் ஃபிளீ மோட்டார் சைக்கிளின் பெருமையை நினைவுபடுத்தும் வகையில் ராணுவத்துடன் அதிக தொடர்புடைய ராயல் என்பீல்டு நிறுவனம் 500 பெகாசஸ் மோட்டார் சைக்கிளை தயாரிக்க முடிவு செய்துள்ளது. மொத்தமே 1000 மோட்டார் சைக்கிளை தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இதில் இங்கிலாந்துக்கான ஒதுக்கீடு 190. மற்ற நாடுகளுக்கு 810 மோட்டார் சைக்கிளை ஒதுக்கியுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிளில் மெரூன் மற்றும் நீல நிற பெகாசஸ் சின்னம் இடம்பெற்றிருக்கும். அத்துடன் பாராசூட் படைப் பிரிவின் சின்னம் பெட்ரோல் டேங்கில் இடம்பெற்றிருக்கும். இத்துடன் சீரியல் எண்ணும் இடம்பெறும்.

ராயல் என்பீல்டின் வாசகமான `Made Like a Gun’ எனும் வாசகம் மோட்டார் சைக்கிளின் பேட்டரி பெட்டியில் இடம்பெற்றிருக்கும். உலகப் போர் 2-ல் இடம்பெற்ற பெகாசஸ் மோட்டார் சைக்கிளில் இடம்பெற்ற அனைத்து குறியீடுகளும் இதிலும் இடம்பெற்றிருக்கும். விமானப் படையின் 250-வது படைப் பிரிவு இதை எல்லைப் பகுதிக்கு எடுத்துச் சென்ற விவரத்தை சித்தரிக்கும் குறியீடுகளும் பைக்கில் இடம்பெற்றுள்ளன. ராயல் என்பீல்டு நிறுவனம் இங்கிலாந்தில் உள்ள அதன் தொழில்நுட்ப மையத்தில் பெற்று அதை பயன்படுத்துகிறது.

போர் காலத்தில் எளிதில் அடையாளம் தெரியாத வகையில் வாகனங்களுக்கு பெயிண்ட் அடிக்கப்பட்டிருக்கும். அதைப் போலவே சர்வீஸ் பிரவுன் மற்றும் ஆலிவ் டிராப் கிரீன் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். ஆனால் இந்தியாவில் சர்வீஸ் பிரவுன் வண்ண பைக்குகள் மட்டும்தான் விற்பனை செய்யப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

ராணுவத்தினர் பயன்படுத்துவதைப் போன்று இருபுறமும் கேன்வாஸால் ஆன பெட்டிகள் இடம்பெற்றிருக்கும். அதில் பிகாசஸ் லோகோ இடம்பெற்றிருக்கும். ராணுவ மோட்டார் சைக்களில் உள்ளதைப் போன்றே பிரவன் ஹாண்டில் பார் கிரிப் இருக்கும். இந்த மோட்டார் சைக்கிளை பார்த்தாலே ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டதைப் போன்ற தோற்றம் கிடைக்கும். மேலும் இத்தகைய மோட்டார் சைக்கிளுக்குத் தேவைப்படும் சரியான உதிரி பாகங்களையும் இந்நிறுவனம் தயாரித்து விற்க திட்டமிட்டுள்ளது.

வின்டேஜ் கலெக்ஷன் என்பது பழைய வாகனங்களை அப்படியே பராமரித்து பயன்படுத்துவதாகும். இது ஒருவகை. ஆனால் உலக யுத்தத்தில் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் மாதிரி போல நவீன தொழில்நுட்பத்திலான மோட்டார் சைக்கிளை அளிக்கிறது ஐஷர் மோட்டார்.

இந்த பெகாசஸ் மாடல், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பிளையிங் ஃபிளீ 125 மோட்டார் சைக்கிளை நினைவுபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. யுத்த காலத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் நிலத்துக்கு அடியில் உள்ள ஆலையில் தயாரிக்கப்பட்டது. இங்கிலாந்தின் வெஸ்ட் உட் பகுதியில் இதற்கான ஆலை அமைக்கப்பட்டு உலக யுத்தம் 2- சமயத்தில் ராணுவத்தினருக்காக தயாரிக்கப்பட்டது என்பது மேலதிக தகவல்.

இருப்பினும் இப்போது தயாராகும் இது, புல்லட் பிரியர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

 

 

Leave a Reply