IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

வங்கிகள் குறித்து புகார் தெரிவிக்க புதிய ஆப் அறிமுகம் – ஆர்.பி.ஐ

2


பொதுமக்கள் வங்கிகள் குறித்து புகார் தெரிவிக்கும் வகையிலான புதிய செயலியை ( ஆப்) ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.


நாட்டின் நிதி நிறுவனங்கள், வர்த்தக வங்கிகள், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மீதான புகார்களை தெரிவிக்கும் வகையில், ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில், புகார் மேலாண்மை அமைப்பு என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தொடங்கி வைத்தார். இதன்மூலம், பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் உடனடியாக சம்மந்தப்பட்ட வங்கிகளின் அலுவலகம் அல்லது ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.


பொதுமக்கள் அளித்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியிடப்படும். எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் வாடிக்கையாளர்களுக்கு திருப்தி இல்லையெனில் மேல்முறையீடு செய்யவும் இந்த புதிய ஆப்பில் வசதி செய்யப்பட்டுள்ளது.