IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த காமக்கொடூரனுக்கு ஆயுள்தண்டனை

0

நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த வழக்கில் காமக்கொடூரனுக்கு திண்டுக்கல் மகளிர் நீதி மன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்த 4 வயது சிறுமி அங்குள்ள அங்கன்வாடி சென்று வந்தாள். இந்த நிலையில் கடந்த 2017 ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி அன்று சிறுமியின் தாயார் கோவிலுக்கு சென்று விட்டார். அதனால் அந்த சிறுமி அவளது பாட்டி வீட்டில் இருந்தாள். சம்பவத்தன்று சிறுமியை பாட்டி அங்கன்வாடிக்கு அழைத்துச் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அய்யலூர், குப்பாம்பட்டியை சேர்ந்த வெள்ளைசாமி மகன் ராஜ்குமார் (வயது 19) பாட்டியையும், சிறுமியையும் தனது பைக்கில் கூட்டிச் சென்றுள்ளார்.

போகும் வழியில் பாட்டியை ரேஷன் கடையில் இறக்கி விட்டு விட்டு, சிறுமியை மட்டும் அழைத்துக் கொண்டு அங்கன்வாடியில் விடுவதாக கூறியுள்ளார். பாட்டியும் சரியெனச் சொல்லி சிறுமியை ராஜ்குமாருடன் தனியாக அனுப்பி வைத்திருக்கிறார்.

பின்னர் பாட்டி சிறுமியை வீட்டுக்கு அழைத்து வர மதியம் அங்கன்வாடி மையத்திற்கு வந்துள்ளார். ஆனால் சிறுமி அங்கன்வாடி மையத்திற்கு வரவில்லை என பணியாளர்கள் கூறினார்கள். இதனால் பாட்டி அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அக்கம் பக்கத்தினரிடமும், உறவினர்களிடமும் தெரிவித்தர். அனைவரும் சிறுமியை தேடினர். சிறுமி எங்கும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், கிணத்துப்பட்டி அரசு பள்ளி அருகே உள்ள சுடுகாட்டின் வழியாக மோட்டர் பைக்கில் சிறுமியை ஒருவர் அழைத்துச் சென்றதாக ஊர் மக்கள் கூறினர். அதையடுத்து அந்த பகுதிக்கு சென்று உறவினர்கள் தேடியபோது முட்புதரில் சிறுமியின் ஆடை, செருப்பு கிடைப்பதை பார்த்தனர். மேலும் சிறிது தூரத்தில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதனை அகற்றியுள்ளனர்.

அப்போது கற்களுக்கு கீழ் இருந்த அதிர்ச்சியை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆடைகள் ஏதுமில்லாமல் உடலில் காயங்களுடன் சிறுமி இறந்து கிடைந்தாள். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இதற்கிடையில் சிறுமியை அழைத்து சென்ற ராஜ்குமார் தலைமறைவாகி விட்டான். வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை பிடித்து விசாரித்தபோது, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டான்.

இந்த கொடூர சம்பவம் நடந்தபோது ராஜ்குமாக்கு வயது 17. அதனால் இந்த வழக்கு விசாரணையை திண்டுக்கல் இளஞ்சிறார் நீதிக்குழு நடத்தி வந்தது. பின்னர் ஓராண்டுக்குப் பிறகு திண்டுக்கல் மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றபட்டு நீதிபதி புருசோத்தம்மன் வழக்கை விசாரித்தார். சிறுமியின் பாட்டி உள்பட மொத்தம் 44 சாட்சிகளை விசாரிக்கப் பட்டனர்.

இதையடுத்து இந்த வழக்கில் நீதிபதி புருசோத்தம்மன் தீர்ப்பு வழங்கினார். அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த குற்றவாளி ராஜ்குமாருக்கு ஆயுள்தண்டனையும் ரூ.13 ஆயிரம் அபதாரமும் விதித்து உத்தரவிட்டார்.