Primary Menu

Top Menu

September 24, 18

ரஜினி போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் – இயக்குநர் கௌதமன்

ரஜினி போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று இயக்குநர் கௌதமன் சவால் விடுத்துள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் கௌதமன் கூறுகையில், நினைத்து பாரக்க முடியாத துயரமான மனோநிலையில்தான் இந்த ஆண்டு தொடங்குகிறது. 50 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட இநத தமிழினம் இன்று சொல்ல முடியாத அளவுக்கு உரிமையை இழந்துள்ளது.

நீர், நிலம், ஆறு, வளம் ஆகிய மட்டுமல்லாமல் உயிரையும் உரிமையும் இழந்து வரும் நிலையில் மீனவர்கள், விவசாயிகள், மாணவர்களின் உரிமையை காப்பாற்ற எங்கேயாவது இருந்து ஒரு உண்மையான, தெளிவான பெரும் வெளிச்சம் தமிழ் இனத்தின் விடியலுக்கு ஏதாவது கிடைத்துவிடாதா என்று தேடி வருகிறோம். இந்நிலையில் ரஜினிகாந்த் ஒரு துக்க செய்தியை தமிழ் இனத்துக்கு புத்தாண்டு பரிசாக கொடுத்திருக்கிறார். தமிழர்களின் உயிர், உரிமைகள் பறிக்கப்படும் போது என்றாவது களத்தில் நின்று போராடியிருக்கிறாரா. இந்த நிலையில் ஆன்மீக அரசியலை அவர் பிரகடனப்படுத்தியுள்ளார். மேலும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று கூறியுளளார். ரஜினிகாந்த் பாஜகவின் பின்புலத்தில்தான் இயங்குகிறார். ரஜினி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அந்த தொகுதியில் அவரை எதிர்த்து நான் நிற்பேன் என்றார் கௌதமன்.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon