Primary Menu

Top Menu

June 24, 18

இனிமேல்தான் ஆன்மிக அரசியலை பார்க்கப்போகிறீர்கள் – ரஜினிகாந்த் அனல் பேச்சு

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்ஜிஆர் சிலையை ரஜினி திறந்து வைத்து கூடி இருந்த மாணவர்கள் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

அரசியல் பேசக்கூடாது என்று அழுத்தமாக இருந்தேன். ஆனால் பேசும் அளவுக்கு தள்ளப்பட்டு உள்ளேன். சில வார்த்தைகள் மட்டும் பேசுகிறேன்,

எம்ஜிஆர் :

எம்ஜிஆர் ஒரு தெய்வப்பிறவி, மக்கள் இன்னும் அவரை மறக்கவில்லை. அவரைப் போல இனி யாரும் வர முடியாது. ஏழை, எளிய மக்களுக்கு எம்ஜிஆர் கொடுத்த ஆட்சியை என்னாலும் கொடுக்க முடியும். கருணாநிதி, மூப்பனார், சோ அவர்களுடன் பழகி நானும் கொஞ்சம் அரசியல் கற்று இருக்கிறேன்.

அரசியல் பாதை எனக்கும் தெரியும், இது பூ, முள், பாம்புகள் இருக்கும் பாதை என்பது எனக்கு தெரியும். அதையெல்லாம் தாண்டி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே நான் அரசியலுக்கு வருகிறேன்.


ஜெயலலிதா:

ஜெயலலிதா இருக்கும் போது ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று கேட்கிறார்கள், அப்போது வராததற்கு பயம் காரணமா என்றும் கேட்கிறார்கள். ஜெயலலிதா இருந்த போதே நான் அரசியலுக்காக குரல் கொடுத்தேன். அப்போதே பயம் இல்லாத போது இப்போது எப்படி பயம் இருக்கும்.

ஆன்மிக அரசியல்:

சாதி-மத சார்பற்ற அறவழியில் நடப்பது தான் ஆன்மிக அரசியல் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். தூய்மை தான் ஆன்மிகம். இறை நம்பிக்கைத்தான் ஆன்மீக அரசியல் என்றார். இனிமேல்தான் ஆன்மிக அரசியலை பார்க்கப்போகிறீர்கள், நம் பக்கம் ஆண்டவனே இருக்கிறான்.

தலைவனாக வருகிறேன் :

தமிழகத்தில் நல்ல தலைவனுக்கான இடம் காலியாக இருக்கிறது. கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லை, ஜெயலலிதா மறைந்து விட்டார். தமிழ்நாட்டில் நல்ல தலைவன் இல்லை என்பதால் அந்த இடத்திற்கு நான் வர விரும்புகிறேன் என்றும் ரஜினி பேசினார்.

Leave a Reply