Primary Menu

Top Menu

September 21, 18

காவலரை தாக்கிய இளைஞர் – ரஜினிகாந்த் கண்டனம்

காவிரி விவகாரம் தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்த வண்ணம் உள்ளன. இதன் உச்சக்கட்டமாக நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கடும் போராட்டம் நடைபெற்றது. எனினும், போட்டி நடத்தப்பட்டு அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் வெற்றியும் அடைந்தனர். முன்னதாக போராட்டம் நடத்திய போது போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இந்தச் சம்பத்தில், இளைஞர் ஒருவர் காவலரை கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இந்த வீடியோக் காட்சியை பார்த்த ரஜினிகாந்த், இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில்  வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும். என்று கூறி பதிவு செய்ததோடு, அதனுடன் போலீசார் தாக்கப்படும் வீடியோ பதிவினையும் பதிவு செய்துள்ளார்.

 

Comments

விமானத்தை முந்திச் சென்ற மோட்டார் சைக்கிள்! – விநோதமான போட்டி

துருக்கியில் நடைபெற்ற வினோத போட்டியில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon