Primary Menu

Top Menu

July 20, 18

அரசியலில் ரஜினிக்கு ஆதரவு கொடுப்பாரா!? – பா.ரஞ்சித் செம்ம பதில்

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக நடித்துள்ள காலா படத்திற்கு பிரம்மாண்ட ரெஸ்பான்ஸ். கபாலி படத்தை விட இது சிறப்பாக இருப்பதாக படம் பார்த்தவர்கள் கூறி வருகின்றனர்.  முதல் நாளில் மட்டும் காலா படம் சென்னை பகுதியில் 1.76 கோடி வசூலித்துள்ளது.

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அத்தனை எதிர்ப்புகளையும் தவிடுபொடியாக்கி தலை நிமிர்ந்து வெற்றி நடை போடுகிறது காலா. ரஜினியின் காலா படத்தைப் பார்த்தவர்களில் பெரும்பாலானோர் டிவிட்டரில் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தொடர்ந்து ரஜினிகாந்துடன் பயணித்துவரும் பா.ரஞ்சித் அவரின் அரசியல் பயணத்திலும் ஆதரவு கொடுப்பாரா!? என கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பா.ரஞ்சித் “ரஜினி மக்களுக்கு நல்லது செய்யும்வரை அவருக்கு ஆதரவு அளிப்பேன், அவர் முரண்பட்டால் நானும் முரண்படுவேன்” என அவர் கூறியுள்ளார்.

Leave a Reply