Primary Menu

Top Menu

August 15, 18

கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் ரஜினி.. – அடுத்த படப்பிடிப்பு ஆரம்பம்

பல தடைகளை தாண்டி காலா படம் இன்று திரைக்கு வந்தது இந்நிலையிலின் ரஜினி தனது அடுத்த படத்திற்கான வேலையை தொடங்கிவிட்டார்.   ஷங்கர் இயக்கத்தில் நடித்த 2.0 படம் இன்னும் வெளியாகவில்லை, சில தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அதன் ரிலீஸ் தேதி தள்ளி போகிறது.

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. இதற்காக படக்குழு அண்மையில் இமயமலைக்கு சென்றுள்ளனர். படக்குழுவும் வேலைகளை முன்பே தொடங்கிவிட்ட நிலையில், இப்படம் அங்குள்ள புகழ்பெற்ற கல்லூரியிலும் இமயமலை அடிவார பகுதிகளில் எடுக்கப்படவுள்ளதாம். மேலும் கல்லூரி என்பதால் ரஜினி கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என தகவல் பரவிவருகிறது. அத்துடன் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இமயமலையில் படப்பிடிப்பு நடைபெறுவதால் இது ஏதோ சாமியார் கதை என்று யாரும் நினைக்க வேண்டாம், இது முழுக்க ரஜினி ரசிகர்களுக்கான படம் என கூறியுள்ளார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ரஜினிக்கு வில்லனாக நடிக்கலாம் என்று தெரிகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் வயது குறைந்தவராக நடிப்பதாக அவரது கெட்டப்கள் தெரிவிக்கின்றன.

 

 

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

கடைக்குட்டி சிங்கமாக மகேஷ் பாபு

மகேஷ் பாபு கடைக்குட்டியாக நடித்துள்ள...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon