Primary Menu

Top Menu

September 20, 18

அரசியலில் களம் இறங்கிய ரஜினிகாந்த் – நடிகர்கள் வரவேற்பு

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் களம் இறங்கியுள்ளதற்கு, நடிகர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள். வருக வருக என நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரசிகர்களின் கனவை நினைவாக்கிய ரஜினிக்கு நன்றி தெரிவிப்பதாக, தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் பதிவிட்டுள்ளார். இனி நல்லதே நடக்கும் எனக் கூறியுள்ள அவர் அனைத்து ரஜினி ரசிகர்களுக்கும், தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

அரசியல் பயணத்தை ரஜினி உறுதி செய்துள்ளது, தமக்கு ஆனந்த அதிர்ச்சியை அளித்துள்ளதாக நடிகர் விவேக் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இனி இந்த முடிவிலிருந்து ரஜினி பின் வாங்கக் கூடாது எனத் தெரிவித்துள்ள விவேக், உணர்ச்சிப் பெருக்கில் ரசிகர்கள் கட்டுப்பாடு மீறக்கூடாது என்றும், தனது டிவிட்டர் பக்கத்தில் விவேக் பதிவிட்டுள்ளார்.

திரை வாழ்க்கையிலிருந்து உண்மை வாழ்க்கைக்கு ரஜினியை வரவேற்பதாகக் கூறியுள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், ரஜினியின் அரசியல் பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

நீண்ட நாள் எதிர்பார்த்த அரசியல் பயணத்தை அறிவித்த ரஜினிக்கு வாழ்த்து தெரிவிப்பதாகக் டிவிட்டரில் கூறியுள்ள நடிகர் ஜெயம் ரவி, மக்கள் விரும்பும் மாற்றத்தை ரஜினி ஏற்படுத்துவார் எனக் கூறியுள்ளார்.

ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இயக்குனர் லிங்குசாமி கடவுளும் தமிழக மக்களும் எப்போதும் ரஜினிக்கு துணையிருப்பார்கள் எனத் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Comments

மக்கள் கொடுத்ததை திருப்பி கொடுப்பதாக கமல்ஹாசன் பேச்சு

60 ஆண்டுகளாக மக்கள் தனக்கு கொடுத்ததை...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon