Primary Menu

Top Menu

September 25, 18

தாமரை நீக்கப்பட்ட பாபா முத்திரை வெளியிட்ட ரஜினிகாந்த்

தாமரையுடன் கூடிய பாபா முத்திரைக்கு ரஜினிகாந்த் குட்பை சொல்லிவிட்டார். ரஜினிகாந்தின் புதிய இணையதளத்தில் தாமரை நீக்கப்பட்ட பாபா முத்திரை மட்டும் இடம்பெற்றிருக்கிறது.

ரஜினிகாந்தியின் ‘ஆன்மீக அரசியல்’ பார்க்கப்படுகிறது. பாஜக மற்றும் அதன் அனுதாபிகளால் ரஜினிகாந்தால் மட்டுமே திராவிடத்துக்கு மாற்றான அரசியலை முன்வைக்க முடியும் என்கிற கருத்து பரப்பப்பட்டு வருகிறது.

கழகங்கள் இல்லாத தமிழகம் என்ற கோஷத்தால் திரும்பிய திசையெங்கும் மரண அடி வாங்கும் பாஜகவுக்கு ரஜினிகாந்தின் ‘ஆன்மீக அரசியல்’ புத்துயிர் தரக்கூடியதாகத்தான் இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் பாஜகவின் அரசு முகமாக அதிமுகவும் குறுக்குவழி முகமாக ரஜினியின் ஆன்மீக அரசியலும் இருக்கிறது.

இந்த அப்பட்டமான உண்மையை மறைக்க ரஜினிகாந்த் தரப்பு படுமும்முரமாக இருக்கிறது. இதன் முதல்கட்டமாகவே இதுவரை ரஜினிகாந்தின் “தாமரையில் பாபா முத்திரை” சின்னம் மாற்றப்பட்டுள்ளது. தாமரை என்றாலே தமிழக மக்கள் தடி கொண்டு அடிப்பார்கள் என்பதை புரிந்து கொண்டதாலோ என்னவோ தற்போது பாபா முத்திரையில் இருந்த தாமரையை தூக்கி கடாசியிருக்கிறார் ரஜினிகாந்த்.

என்னதான் தாமரையை மறைத்தாலும் ரஜினி உச்சரித்துவிட்ட ஆன்மீக அரசியல் என்பது பாஜகவின் பூனைக்குட்டி வெளியே வந்தது வந்ததுதான் என்பதை காட்டிக் கொடுத்துவிட்டது தமிழக அரசியல் களத்தில். அடுத்ததாக அவர் அறிவிக்கப் போகும் கட்சியின் பெயரும் ஆன்மீகம் சார்ந்ததாகவே இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை… எத்தனை முகத்தோடு பாஜக வந்தாலும் தமிழகம் ‘இன்’னொரு முகத்தை காட்டிக் கொண்டுதான் இருக்கப் போகிறது!

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon