Primary Menu

Top Menu

September 24, 18

3டியில் 2.O டீசரை தியேட்டரில் இலவசமாக பார்க்கலாம்-சங்கர்

கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது.  ‘2.O.’
இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திரையிட முடியவில்லை. கிராபிக்ஸ் வேலைகள் திட்டமிட்டபடி முடியாததால் ரிலீஸ் தேதி மீண்டும் மீண்டும் தள்ளிப்போனது.
கிராபிக்ஸ் பணிகளை முடிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்பட்டதால் ரிலீஸ் தேதியில் குழுப்பமும் நீடித்தது. சமீபத்தில் கிராபிக்ஸ் பணிகள் முடிந்து விட்டதாகவும், படத்தை நவம்பர் மாதம் 29ம் தேதி வெளியிட இருப்பதாகவும் இயக்குனர் சங்கர் அறிவித்தார்.
மேலும் இப்படத்தின் டீசரை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். தற்போது இந்த டீசரை பிவிஆர் மற்றும் சத்யம் திரையரங்குகளில் இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதாவது +91 9099949466 இந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தால் 2.O டீசரை தியேட்டரில் இலவசமாக பார்க்கலாம் என்று சங்கர் கூறியிருக்கிறார்.
Comments

சர்கார் படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியீடு

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon