Primary Menu

Top Menu

September 21, 18

நானும் சமூக விரோதிதான் – ரஜினிக்கு கமல் பதில்

தூத்துக்குடியில் போராட்டம் நடத்துபவர்கள் சமூக விரோதி என்றால், தானும் சமூக விரோதிதான் என மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்திப்பதற்காக பெங்களூரு புறப்படும் முன் சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்திற்கான தேவை குறித்து, கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் பேச இருப்பதாகவும், காலா பட பிரச்சினையை வியாபாரிகள் பார்த்துக் கொள்வார்கள் என்றும் தெரிவித்தார். மேலும், தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக ரஜினி தெரிவித்தது அவரது சொந்த கருத்து என்று குறிப்பிட்ட கமல், போராட்டத்தை நிறுத்தக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.

ரஜினியின் சமூக விரோதி வாய்ஸ் குறித்த கேள்விக்கு,

‘’போராட்டம் நடத்துபவர்கள் சமூக விரோதிகள் என்றால் நானும் சமூக விரோதிதான்.  போராட்டத்திற்கு சில தன்மை உள்ளது.  அது தூத்துக்குடியில் நடைபெற்றது.  போராட்டத்தை நிறுத்த மாட்டார்கள். நிறுத்தவும் கூடாது.  மக்களின் எண்ணங்களையே நான் கருத்தாக தெரிவிக்கிறேன். ’’என்றார்.

திமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க எடுத்துள்ள முடிவு குறித்த கேள்விக்கு,  ‘’திமுக எம்.எல்.ஏக்கள் பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளது வரவேற்கத்தக்கது.’’என்றார்.

Comments

இலவச அரிசி வழங்கும் பணியில் புதுச்சேரி குடிமை பொருள் சுறுசுறு

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon