Primary Menu

Top Menu

September 26, 18

வடமாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு :வானிலை மையம்

தென் மேற்கு பருவமழையால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய நீலகிரி, கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் பரவலாக நல்ல மழையை பெற்றன

விழுப்புரம், கடலூர் புதுச்சேரியில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் வெப்பசலனம் காரணமாக அவ்வப்போது லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம், கோவில்குளத்தில் தலா 5 செ.மீ., மழை பெய்துள்ளது.

Comments

வங்கிகளின் வாராக்கடன் குறைவு – அருண்ஜெட்லி

மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon