Primary Menu

Top Menu

September 20, 18

புதுச்சேரி அரசு சார்பில் 87 ஆம் ஆண்டு கலைவிழா!!

புதுச்சேரியில் கலைப்பண்பாட்டுத்துறையும், தஞ்சை தென்னகப்பண்பாட்டு மையமும் இணைந்து  14 ஆம் தேதியில் இருந்து வருகிற 16 ஆம் தேதி வரை நடைபெறும் கலைவிழாவை, முதல்வர் நாராயணசாமி, தலைமை செயலாளர் அஸ்வின் குமார் ஆகிய இருவரும் முரசு கொட்டி தொடங்கி வைத்தனர்.

புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு ஒவ்வொரு வருடமும், புதுச்சேரி மக்கள் மற்றும் புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் கவரும் விதத்தில், ஆண்டு தோறும் கலைப்பண்பாட்டுத்துறையும், தஞ்சை தென்னக பண்பாட்டு மையமும் இணைந்து 14 ஆம் தேதியில் இருந்து வருகிற 16 ஆம் தேதி வரை தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை தமிழக கலைஞர்கள் மட்டும் அல்லாமல் இந்தியாவில் உள்ள குஜராத், மணிப்பூர், ஆந்திரா, மகாராஷ்டிரா உட்பட 12 மாநிலங்களில் இருந்து, கலைஞர்கள் தங்களது கலைநிகழ்ச்சிகள் மூலம் மக்கள் கவரும் வகையில், புதுச்சேரி அரசு சார்பில் இந்த கலைவிழா 87 ஆம் ஆண்டு தொடங்கி, தொடர்ந்து 33 ஆண்டுகளாக, இந்த கலைவிழா புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது என்று முதல்வர் நாராயணசாமி அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலைஞர்கள் பல்வேறு வீரசாகசம் மற்றும் கலைநிகழ்ச்சிகளை முதல்வர் நாராயணசாமி மற்றும் தலைமை செயலாளர் அஸ்வின் குமார், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லஷ்மிநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டு ரசித்தார்கள்.

Comments

விமானத்தை முந்திச் சென்ற மோட்டார் சைக்கிள்! – விநோதமான போட்டி

துருக்கியில் நடைபெற்ற வினோத போட்டியில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon