Primary Menu

Top Menu

September 20, 18

புதுச்சேரி செயற்கை மணல் பரப்பில் குளித்த 2 சிறுவர்கள் கடலுக்குள் மூழ்கினர்

புதுச்சேரி கடற்கரை சாலையில் தலைமைச் செயலகம் அருகே செயற்கையாக மணல் பரப்பு உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் சில அடி தூரம் மட்டுமே கடலுக்குள் செல்ல பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் செயற்கை மணல் பரப்பு பகுதியில் நேற்று மதியம் 2 மணி அளவில் சிலர் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் 2 பேர் கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கிக் கொண்டனர். அவர்களை வாரி சுருட்டிக் கொண்டு கடலுக்குள் அலை இழுத்துச் சென்றது. இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலோர மீட்பு குழுவினர் விரைந்து சென்று அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கடற்கரை மணல் பரப்பில் கிடந்த புத்தகப்பை, அடையாள அட்டையை வைத்து விசாரித்தனர். கடற்கரையோரம் கிடந்த அவர்களது சட்டை பையில் இருந்த சாவியை எடுத்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள்களில் போட்டு பார்த்தனர். இதில் ஒரு மோட்டார் சைக்கிளில் அந்த சாவி பொருந்தியது. அந்த மோட்டார் சைக்கிள் யாருடையது என்பதை விசாரித்ததில் கடலில் இழுத்துச் செல்லப்பட்டவர்கள் யார்? என்பது பற்றிய விவரம் தெரியவந்தது.

மாணவர்களின் பெற்றோர் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்  தங்களது மகன்களை கடல் அலை இழுத்துச் சென்ற நிலையில் மனமுடைந்த பெற்றோரின்  புகாரை வாங்காமல் போலீசார் அலைக்கழித்தது மனிதாபிமானமற்ற செயலாக இருந்தது.

Comments

விமானத்தை முந்திச் சென்ற மோட்டார் சைக்கிள்! – விநோதமான போட்டி

துருக்கியில் நடைபெற்ற வினோத போட்டியில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon