Primary Menu

Top Menu

September 25, 18

பாண்டிச்சேரி எனும் குட்டி உலகம்!

கடற்கரைகளுக்குப் புகழ்பெற்ற கோவாவுக்குச் செல்ல இயலாதவர்கள் அருகிலேயே அழகாகக் காத்திருக்கிற பாண்டிச்சேரிக்குச் செல்லலாம். ‘பாண்டி’ என்று பலராலும் அழைக்கப்படும் இந்நகரத்தின் அதிகாரப்பூர்வ பெயர் – புதுச்சேரி. அழகான கடற்கரைகள், பிரெஞ்சு பாணி கட்டிடங்கள், கழிமுகங்கள், படகுச்சவாரிகள் என சுவாரஸ்யமான பல அம்சங்களைக் கொண்டுள்ளது பாண்டிச்சேரி. ஆசிரமங்கள், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என ஆன்மிக அம்சங்களுக்கும் குறைவில்லை.

எப்படிச் செல்வது?
ரயில் (சென்னை, திருப்பதி, புவனேஸ்
வரிலிருந்து நேரடி ரயில் வசதி).
பேருந்து, கார்.
சென்னையிலிருந்து 160 கி.மீ., பெங்களூரிலிருந்து 320 கி.மீ.
விழுப்புரம், திண்டிவனத்திலிருந்து டவுன் பஸ்கள் உள்ளன.

பார்க்க வேண்டிய இடங்கள்?

ஆரோவில் சர்வதேச நகரம்… இங்கு 43 நாடுகளைச் சேர்ந்த 2,200 பேர் வாழ்கின்றனர். ‘மாத்ரி மந்திர்’ செல்ல குறைந்தபட்சம் 2 நாட்களுக்கு முன்பே அனுமதிச்சீட்டு பெற வேண்டும். இங்குள்ள ஆரோ பீச், இந்தியாவின் முக்கிய கடற்கரைகளில் ஒன்று.

சுண்ணாம்பார்… பாண்டிச்சேரியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இந்தக் கழிமுகத்தில் படகுச்சவாரி பிரமாதம். 3 கி.மீ. பயணத்துக்குப் பிறகு கடற்கரையில் இறக்கி விடுவார்கள். கடலில் குளித்து, விளையாடி, ஓய்வெடுத்து விரும்பும்போது படகில் திரும்பலாம். உணவு, குடில்கள், குளியலறை, கழிப்பறை வசதிகள் உள்ளன.

உசுட்டேரி, பாரடைஸ் கடற்கரை, மியூசியம், பாரதி பூங்கா.  தாவரவியல் பூங்கா (1,500 வகை தாவரங்கள் வாழும் இந்த பொட்டானிகல் கார்டன் 2011ல் தானே புயலில் பாதிக்கப்பட்டுள்ளது.) அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோயில்…

என்ன வாங்கலாம்?

மண் பொம்மைகள், கைவினைப் பொருள்கள், ஹேண்ட் மேட் பேப்பர்கள், மூலிகைப் பொருள்கள், ஆரோவில் தயாரிப்புகள்…

 

வித்தியாசமான அனுபவம்?

‘கடற்கரையோரம் ஓர் நடைப்பயணம்’ செல்வது இனிமை. மாதிரிகள் சேகரிப்பது மாணவர்களுக்கு உதவும்.


இங்கிருந்து செல்லக்கூடிய இடங்கள்?

முதலியார் குப்பம் படகுத்துறை, ஆலம்பறா கோட்டை, மாமல்லபுரம் (சென்னை ரூட்), செஞ்சி கோட்டை (திருவண்ணாமலை ரூட்), கடலூர், சிதம்பரம், பிச்சாவரம், தரங்கம்பாடி, காரைக்கால், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி…

Comments

கீழடி அகழ்வாராய்ச்சி – பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம்

சிந்து, கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon