IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

மாதவிடாய் பிரச்சினைக்கு தீர்வு தரும் மாதுளை!

2


உடலுக்கு ஏராளமான நன்மைகளை தரக்கூடிய பழங்களில் ஒன்று மாதுளை. மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. அனைவரும் விரும்பி சாப்பிடும் மாதுளையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் இ உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. உடலுக்கு நல்ல எனர்ஜியை தரக்கூடியது. மேலும், இதய நோய்கள், புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கிறது. கொழுப்பை குறைக்கும் தன்மை உடையது.

நட்டநடு ராத்திரி வரை கொட்ட கொட்ட விழித்திருக்கும் குழந்தை


மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகறிக்கும். மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று வகை சுவைகள் உள்ளன. இது வருடந்தோறும் கிடைக்கக்கூடிய கனி என்பது இதன் கூடுதல் நன்மையாகும். மதுளையை தினமும் டயட்டில் சேர்த்துக் கொண்டும் வருகின்றனர். ஆனால் சிலருக்கு இந்த பழத்தை பொறுமையாக உரித்து சாப்பிட நேரமில்லாததால், இதனை சாப்பிடுவதை தவிர்க்கின்றனர்.

சின்னஞ்சிறு நெல்லிக்காய்க்குள் இத்தனை மருத்துவ குணங்களா?


மேலும் சில மாதுளம் பழத்தின் மகத்துவத்தை காண்போம்…

  1. மாதுளை தோலைக் காயவைத்து அரைத்து பல்பொடியாகவும் பயன்படுத்தலாம்.

  2. தினமும் மாதுளை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் உடலில் உள்ள கழிவுகளை அகற்றும்.

  3. மாதுளை ஜுஸ் தினமும் குடித்து வந்தால் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மேலும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.

  4. எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்பு சம்பந்தமான அனைத்து நோய்களையும் போக்கும் வல்லமை மாதுளைக்கு உண்டு.

  5. மாதுளை சாப்பிடும் பழக்கமுடையவர்களுக்கு மூட்டுத்தேய்மானம், முதுகெலும்பு வலி, கழுத்துவலி போன்றவை ஏற்படாது.

  6. மூலநோய் மற்றும் அதனால் ஏற்படுகிற ரத்தக்கசிவுக்கு மாதுளை நல்ல மருந்தாகும்.

  7. தலைசுற்றல், பித்தம் போன்றவற்றால் அவதிப்படுகிறவர்கள் தொடர்ந்து மாதுளை சாப்பிட்டு வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.

  8. மாதுளை பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக இரத்தபோக்கை கட்டுப்படுத்துவதோடு மாதவிடாய் இயக்கத்தையும் சீராக்குகிறது. மேலும் கர்பப்பைத் தொற்றுகள் வராமலும் பாதுகாக்கிறது.

  9. கர்ப்பிணி பெண்கள் மதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை வராது. மேலும் கால்சியம், தாது உப்புக்கள் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும்.

  10. மாதுளம் மொட்டுக்களை வெயிலில் உலர்த்தி பொடி செய்து அதனை வேளைக்கு ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீருடன் பருகினால் இருமல் நீங்கிவிடும்.

  11. சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைப் போக்கி சருமத்தைப் பளபளப்பாக்கும் குணம் மாதுளைக்கு உண்டு. இதன்மூலம் அழகாக, பொலிவுடன் இருப்பதற்கும் மாதுளை உதவுகிறது.

  12. மாதுளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று புண்கள் ஆறிவிடும். மேலும் வயிற்றில் இருக்கும் புழுக்கள் நீங்கும்.

  13. மாதுளை தோலை காயவைத்துப் பொடியாக்கி அதோடு முருங்கைப்பொடி, கறிவேப்பிலைபொடி மூன்றையும் சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக அருந்தலாம். இதனால் எலும்பு தேய்மான நோய்கள் குணமடையும்.

  14. மாதுளையை ஜூஸாக சாப்பிடுவதைவிட மாதுளை சுளைகளை அப்படியே மென்று சாப்பிடுவது நல்லது.

  15. நம் நாட்டில் விளையக்கூடியது வெள்ளை மாதுளை. அதனால் பெரும்பாலும் அதை வாங்கி பயன்படுத்துவது நல்லது.


#Pomegranate #solve #menstrual #problem!

எப்பேர்பட்ட சிறுநீர் கல்லையும் கரைக்க அற்புத மருந்து நாவல் பழம்