Primary Menu

Top Menu

September 22, 18

நடுரோட்டில் போலீசிடம் சீன் போட்ட இளைஞர்!!

நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சிக்னலில் ராஜேஷ்குமார் என்ற காவலர், வாகனங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். அப்போது, செல்போன் பேசியபடி இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞரை தடுத்து நிறுத்திய அவர், வாகனத்தை சாலையோரம் நிறுத்துமாறு கூறி சாவியை எடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், சாவியை கொடுக்கும்படி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருக்கட்டத்தில் போலீசாரை ஒருமையில் பேச ஆரம்பித்த இளைஞர் அவரை அடித்து விடுவது போல சைகைகளை செய்ததால், சக போலீசார் அந்த இளைஞரை சூழ்ந்தனர்.

அப்போதும் ஆத்திரம் அடங்காத இளைஞர் போலீசாரை மரியாதை குறைவாக தொடர்ந்து பேசி வந்தார். இதனைத்தொடர்ந்து மூன்றுக்கு மேற்பட்ட போலீசார் அந்த இளைஞரை நையப்புடைந்து இழுத்து சென்றனர். இதனை தொடர்ந்து இளைஞர் குடிபோதையில் உள்ளாரா என்றும் போலீசார் மருத்துவ சோதனை நடத்தினர்.

 

Comments

இணையத்தில் வைரலாகும் வர்மா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon