Primary Menu

Top Menu

September 20, 18

‘பெரியார் குத்து’ பாட்டுக்கு நடனம் ஆடிய சிம்பு !!

நடிகர் சிம்பு சிறந்த நடிகர் மட்டுமின்றி நல்ல பாடகர் மற்றும் இசையமைப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே. திரைப்படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி அவ்வப்போது தனிப்பாடல்களையும் வெளியிட்டு வருவது சிம்புவின் வழக்கம்.

அந்த வகையில் சிம்புவின் அடுத்த தனிப்பாடல் ‘பெரியார் குத்து’ பாடல் ஆகும். இந்த பாடலின் டீசர் கடந்த மாதம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த பாடல் தற்போது முழுவடிவம் பெற்றுள்ளது.

ரமேஷ் தமிழ்மணி இசையமைப்பில் மதன்கார்க்கி பாடல் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலின் படப்பிடிப்பு நேற்று நடந்தது. இந்த பாடலை சிம்பு பாடியது மட்டுமின்றி இதற்காக நடனமும் ஆடியுள்ளார். இந்த பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாகவும், பெரியாரின் கருத்துக்களை கொண்ட இந்த பாடல் பெரும் வரவேற்பை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon