Primary Menu

Top Menu

July 19, 18

mPassport Seva App : ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம் !!

இனிமேல் பாஸ்போர்ட் பெறுவதற்கு பாஸ்போர்ட் மண்டல அலுவலகங்களில் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருக்க  வேண்டிய அவசியமில்லை. நாட்டின் எந்தப்  பகுதியிலிருந்தும் பாஸ்போர்ட்டைப் பெற விண்ணப்பிக்க முடியும் வகையில் சமீபத்தில் மத்திய அரசு ‘பாஸ்போர்ட் சேவா ஆப்’ (mPassport Seva App) என்ற செயலியை வெளியிட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட இந்தச்  செயலி கடந்த சில வருடங்களாகவே ப்ளே-ஸ்டோரில் இருக்கும் ஒன்றுதான் என்றாலும் அதில், பாஸ்போர்ட்டைப் பெற விண்ணப்பிப்பதற்கான வசதி இருந்ததில்லை. மாறாக  பாஸ்போர்ட் சம்மந்தப்பட்ட தகவல்களைத் தருகின்ற ஒரு செயலியாகத்தான் இருந்துவந்தது. ஆனால் தற்போது, பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கான வசதியும் இணைக்கப்பட்டு புதிய வடிவில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் (iOS) ஆகிய இரண்டு இயங்குதளங்களிலும் இந்தச்  செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Image result for duke of edinburgh's award

    1. புதியதாக நமக்கான அக்கவுன்டினை தொடங்குவதற்கு ‘New User Registration’.
    2. ஏற்கனவே அக்கவுன்ட் உள்ளவர்களுக்கு “Existing User Login”.
    3. நமது விண்ணப்பத்தின் நிலையினை அறிவதற்கு “Status Tracker”.
    4. விண்ணப்பிப்பதுடன்  சமர்ப்பிப்பதற்குத்  தேவையான ஆவணங்களைக் குறித்து அறிய “Document Advisor”.
    5. விண்ணப்பிப்பதற்கான செலவினைக் கணக்கிட “Fee Calculator’.
    6. பாஸ்போர்ட் சேவை மையத்தில் ஆவணங்களை சரிபார்ப்பதற்கான நேரத்தினை அறிந்துகொள்வதற்கு  “Appointment Availability”.
    7. நமக்கு அருகிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகங்கள், ‘பாஸ்போர்ட் சேவா கேந்திரா’ மற்றும் காவல் நிலையங்கள் குறித்து தெரிந்துகொள்வதற்கு “Location Centre”.
    8. மேலும் பின்னிணைப்புகளுக்காக  Annexures/Affidavits.
    9. பாஸ்போர்ட் சேவைகள் குறித்த புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 1800-258-1800 ( Toll Free) எண்ணும் இதில் தரப்பட்டுள்ளது.

இதுவரைக்கும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் இந்தச் செயலியினை பயன்படுத்தி வருகின்றனர். நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் புதிய பாஸ்போர்டிற்காக விண்ணபிக்க முடியும். இதனால் மக்கள் மிக எளிதாக தங்களுக்கான பாஸ்போர்ட் சேவையினைப் பெறமுடியும்.

டோல்கேட் தடுப்புகளை கையால் உடைத்து சென்ற எம் எல் ஏ!!

டோல்கேட் பணியாளர்கள் தாமதப்படுத்தியதால்...

Leave a Reply