IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

பப்பாளி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

5


பப்பாளி எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு சுவையான பழம் ஆகும். இது மலிவாக கிடைக்ககூடிய பழங்களில் ஒன்றாகும். இதில் வைட்டமின் ஏ சத்து காணப்படுகிறது. 100gm பப்பாளியில் 43கலோரிகள் மட்டுமே உள்ளன. மஞ்சள் நிற பழங்களில் காணப்படும் கரோட்டின் சத்து இப்பழத்தில் அதிகம் காணப்படுகிறது. பப்பாளி பழத்தின் விலை குறைவு ஆனால் இதில் இருக்கும் நன்மைகள் ஏராளம்.


பப்பாளி பழம் மட்டும் அல்லாது அதன் காய், பழத்தில் வடியும் பால், விதை, இலை, என அனைத்திலும் மருத்துவ குணம் அடங்கி உள்ளது. அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்தவித நோய்களும் தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷகிருமிகளை கொல்லும் சக்தி உள்ளது.


மாதவிடாய் பிரச்சினைக்கு தீர்வு தரும் மாதுளை


பப்பாளி பழத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.


*பப்பாளி காயில் வடியும் பாலை எடுத்து வாயில் ஏற்படும் புண்களில் பூசினால் புண் ஆறிவிடும்.


*பப்பாளி விதையை அரைத்து பாலில் கலந்து குடித்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிந்து விடும்.


*பப்பாளி காயை கூட்டாக சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.


*பப்பாளி காயின் பாலை பசும் பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வந்தால் புண் ஆறிவிடும்.


*பப்பாளி பாலை குழந்தைகளுக்கு தலையில் ஏற்படும் புண்களில் தடவினால் புண் ஆறிவிடும்.


செரிமாணக் கோளாறை குணமாக்கும் ஏலக்காய்!


*பப்பாளி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குறையும்.


*பப்பாளி பழத்துடன் சிறிதளவு தேன் கலந்து முகத்தில் பூசி விட்டு 20 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் உள்ள சுருக்கம் நீங்கும்.


*பப்பாளி காயை குழம்பு வைத்து சாப்பிட்டு வந்தால் பிரசவித்த பெண்களுக்கு நன்றாக பால் சுரக்கும்.


*பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.


*பப்பாளி இலைகளை அரைத்து கட்டிகளின் மேல் போட்டு வந்தால் கட்டி உடையும்.


*பப்பாளி இலையின் சாற்றை பிழிந்து வீக்கம் உள்ள இடங்களில் தடவினால் வீக்கம் குறையும்.


எடையைக் குறைக்கும் ரஸ்தாளி


*பப்பாளி பழத்தை தொடந்து 4 வாரங்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் நீங்கும்.


*கனிந்த பப்பாளி பழத்தை முகத்தில் தேய்த்து பின் 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகப்பருக்கள் நீங்கும்.


#papaya #fruit #Benefits