Primary Menu

Top Menu

September 20, 18

மாடக்குளம் கண்மாயில் பனைவிதை நடவு

மதுரையில் நேற்று மாடக்குளம் கண்மாய் பாதுகாப்பு குழுவின் சார்பாக கண்மாய் கரைகளில் பனைவிதை நடும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் திரு.மோகன்குமார் மற்றும் “நேச்சர் செக்யூர் பவுண்டேசன்” நிறுவனர் திரு.செல்வம் ராமசாமி தலைமை வகித்தனர்.

பனை பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் முனைவர் பேராசிரியர் திரு. நாகரத்தினம் உரை நிகழ்த்தியதோடு பனையின் தற்கால அவசியம் பற்றி நிகழ்வில் பங்குபெற்றோருக்கு விளக்கமளித்தார்.

மாடக்குளம் கண்மாய் பாதுகாப்பு குழுவின் சார்பாக திரு. என்.முத்துக்குமார், திரு.மீ.மு.கருப்பு, திரு.வி.கே.டி.உதயக்குமார், திரு.வி.டி.என்.பிரபாகரன், திரு.சக்திவேல் ஆகியோர் இந்நிகழ்வினை ஒருங்கிணைத்து இருந்தனர்.

மருத்துவர் திரு.பத்ரி நாராயணன் பனைபற்றி பேசியதுடன் அவர் கொண்டு வந்திருந்த வேறு சில மரக்கன்றுகளும் நடப்பட்டன.

“திருநகர் பக்கம்” விஷ்வா தனது அமைப்பின் குழுவினருடன் வந்திருந்து பனைவிதைகளை நட்டனர். மேலும் “நீர்நிலைகள்” அபுபக்கர், “பனையோலை” திரு.மணிவண்ணன், திருநகர் திரு.வி.மதன்குமார், “ஐவனம்” திரு. கார்த்திக், திரு.கவிதமிழ், திரு.காளிதாஸ், கலாம் மாணவர்கள் அமைப்பு திருமதி.கற்பகம், பசுமைப்படை திரு. ஹரிபாபு தங்கள் அமைப்பின் சார்பாக வந்திருந்து பனைவிதை நடும் நிகழ்வில் பங்கெடுத்தனர்.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon