Primary Menu

Top Menu

September 20, 18

பனைவிதை நடவு கரிசல்குளம் கண்மாய் பகுதியில்

மதுரை கரிசல்குளம் கண்மாய் கரையில் பனைவிதை நடும் நிகழ்வு கடந்த ஞாயிறு காலை நடந்தது.

இந்த சமூகசேவை நிகழ்வினை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தவர் பனையோலை அமைப்பின் நிறுவனர் திரு.மணிவண்ணன் அவர்கள்.

இணைந்து ஒருங்கிணைத்து களம் இறங்கியவர்கள் நீர்வனம், திருநர் பக்கம், ஐவனம் மற்றும் மதுரை நண்பர்கள் குழு என்ற அமைப்பினர்.

அனைவரும் இணைந்து கரிசல்குளம் கண்மாய் கரையினில் ஆயிரத்துக்கும் மேல் பனைவிதைகளை நட்டுவைத்தனர்.
.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக முனைவர் பேராசிரியர் திரு. சு. நாகரத்தினம் கலந்து கொண்டு பனையின் பெருமைகள் பயன்பாடுகள் பண்டைகாலம் தொட்டு இருந்து வந்த பழக்கவழக்கங்கள் என விளக்கிக் கூறி சிறப்பித்தார்.

“நேச்சர் செக்யூர் பவுண்டேசன்” நிறுவனர் திரு.செல்வம் ராமசாமி இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

கண்மாய்க் கரையின் இருபுறங்களிலும் பனைவிதைகளை இந்நிகழ்வில் பங்கு கொண்ட அனைவரும் ஆர்வத்துடன் நட்டு மகிழ்ந்தனர்.

Comments

மக்கள் கொடுத்ததை திருப்பி கொடுப்பதாக கமல்ஹாசன் பேச்சு

60 ஆண்டுகளாக மக்கள் தனக்கு கொடுத்ததை...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon