Primary Menu

Top Menu

August 15, 18

பாகிஸ்தான் அத்துமீறிய தாக்குதலில் 8 மாத குழந்தை உயிரிழந்தது

காஷ்மீரின் அமைதிக்கும், வளர்ச்சிக்கும் பெண்கள் உதவ வேண்டும் என அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி வேண்டுகோள் விடுத்தார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி பேசியதாவது:

காஷ்மீரில் நடக்கும் வன்முறை சம்பவங்களால், தாயாக, மனைவியாக, சகோதரியாக மட்டுமின்றி ஒரு பெண்ணாகவும் நாம் சிரம்ப்பட்டு வந்துள்ளோம். காஷ்மீரில் அமைதி திரும்பவும், காஷ்மீரின் வளர்ச்சிக்கும் பெண்கள் உதவ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பாகிஸ்தான் படைகளின் அத்துமீறிய தாக்குதலில் 8 மாத குழந்தை உயிரிழந்தது தொடர்பாக, அந்நாட்டு தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 21ஆம் தேதி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகே, பிம்பர் ((Bhimber)) பகுதி மீது பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்கியதாக வெளியுறவுத்துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதில் 8 மாத குழந்தை உயிரிழந்தது தொடர்பாக, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சையது ஹைதர் ஷாவை ((Syed Haider Shah)) அழைத்து, கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

பாகிஸ்தான் படைகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதும், இளம் சிறார்கள் உள்ளிட்ட அப்பாவிகளை குறிவைப்பதும் மனிதத் தன்மைக்கும், ராணுவத்தின் நடத்தைக்கும் எதிரானது என கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon