Primary Menu

Top Menu

September 25, 18

கிரிக்கெட் தொடர்களில் பாகிஸ்தானுடன் இந்தியா பங்கேற்காது – சுஷ்மா சுவராஜ்

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர்களில் இந்தியா பங்கேற்காது என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். 

அண்மைக்காலமாக பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தொடர்ந்து அத்துமீறல்களை நிகழ்த்தி வருகிறது.  நேற்றும் காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

இதற்கிடையே புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 5 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இதையடுத்து, இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து ஆராய்வதற்காக வெளியுறவுத்துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டம் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய சுஷ்மா சுவராஜ், எல்லை தாண்டி பாகிஸ்தான் ராணுவமும், அந்நாட்டு தீவிரவாதிகளும் நடத்தி வரும் தாக்குதல்களால் இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர்களை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

இரு நாடுகளுக்கும் பொதுவான இடத்தில் கூட போட்டிகளை நடத்த முடியாத சூழல் உள்ளதாகவும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

Comments

ஆசிய கோப்பை – ரோகித் , தவான் அதிரடி சதத்தால் இந்தியா வெற்றி

ஆசிய கோப்பை 'சூப்பர்-4' சுற்றுப்போட்டியில்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon