IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

உறவினருடன் பேசிய குற்றத்திற்காக கணவரே மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற அதிர்ச்சி சம்பவம்

2


தூத்துக்குடி ஒட்டப்பிடராம் அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அங்கன்வாடி பெண் ஊழியரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடராம் அருகே உள்ள குலசேகரநல்லூரைச் சேர்ந்தவர் லெட்சுமணன்(41). இவர் கொத்தனராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மகேஸ்வரி(36). இவர் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு கனகு(12) என்ற மகளும், மகராஜன்(7) என்ற மகனும் உள்ளனர்.


லெட்சுமணனுக்கு குடிப்பழக்கம் இருப்பதால் வேலை முடித்து வீடு திரும்பி வரும் போது அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் சண்டை போடுவதாக தெரிகிறது. இந்நிலையில் மகேஸ்வரி தனது உறவினர் ஒருவரிடம் அடிக்கடி செல்போனில் பேசி வருவதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த லெட்சுமணன் தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார்.


இந்நிலையில் நேற்று காந்தி ஜெயந்தி விடுமுறை என்பதால் இருவரும் வேலைக்கு செல்லவில்லை. குழந்தைகள் இருவரும் வீட்டுக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மதியம் வீட்டிலிருந்த லெட்சுமணன் தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகம் பட்டு மீண்டும் தகராறில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் அதிகமானது.


இதில் ஆத்திரமடைந்த லெட்சுமணன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவி மகேஸ்வரியை சரமாரியாக வெட்டினார். இதில் அவருக்கு கழுத்து மற்றும் கைகளில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மகேஸ்வரி இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கள்ளக்காதலியின் நல்ல காதலுக்கு துணைபோன வாலிபர் வெட்டிக் கொலை!


இதையடுத்து லெட்சுமணன் வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு ஒட்டப்பிடாரம் காவல்நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். அப்போது அவர் தன் மனைவியை அரிவாளால் வெட்டி கொன்றதாகவும், மனைவியின் உடல் வீட்டில் இருப்பதாகவும் கூறி வீட்டின் சாவியை போலீசாரிடம் ஒப்படைத்தார். அதன்பிறகு லெட்சுமணனை போலீசார் கைது செய்தனர்.


இதனைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மணி மொழி, சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணையை தொடங்கினர். கொலை செய்யப்பட்ட மகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


உறவினருடன் பேசிய குற்றத்திற்காக நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கணவரே மனைவியை வெட்டிக் கொன்ற சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Tuticorin #AnganwadiEmployee #Murder #In4Net