IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

எப்பேர்பட்ட சிறுநீர் கல்லையும் கரைக்க அற்புத மருந்து நாவல் பழம்!

4


நாவல் பழமானது பல்வேறு ஆரோக்கியம் நிறைந்த பழம் ஆகும். இதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த பழத்தில் ப்ரோடீன், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி, பிருக்ட்ரோஸ், க்ளுகோஸ், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் காணப்படுகின்றனர்.

இத்துனூண்டு பூண்டுக்குள்ளே இத்தனை நன்மைகளா


நாவல் பழத்தைப் பார்த்தால் அனைவருக்கும் பள்ளிப் பருவக் காலமும், சிறு வயது ஞாபகங்களும் வந்து, மனதில் சந்தோஷத்தைக் கொடுக்கும். அதுவும் கிராமப் புறங்களில் வாழ்ந்தவர்கள் நிச்சயமாக கல்லால் அடித்து சாப்பிட்டிருப்பார்கள். எனவே இவைகளைப் பார்க்கும் போது, கல்லால் அடித்து சாப்பிட்ட அனுபவம் கிராமப்புறத்தில் வாழ்ந்த ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு இனிமையான நினைவுகளாக இருக்கும்.


ஆயுர்வேதம் மற்றும் யுனானி போன்ற மருத்துவங்களில் இந்த பழங்களும், இதன் விதை, இலை மற்றும் மரப்பட்டைகளும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மேலும் நாவல் பழம் பித்தம், மலச்சிக்கல், இரத்த சோகை பேன்றவற்றை குணப்படுத்தும். நாவல் பழத்தை சாப்பிட்டு வந்தால் குடலில் ஏற்படும் புண்கள் நீங்கும்


நாவல் பழம் சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் மேலும் சில நன்மைகளை பற்றி தெரிந்துகொள்வோம்.

சின்னஞ்சிறு நெல்லிக்காய்க்குள் இத்தனை மருத்துவ குணங்களா?

  1. நாவல் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் நீங்குவதுடன், சிறுநீர்ப்பை பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

  2. நாவல் பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. அதனால் இரத்த சோகை நோய் வராமல் காக்க உதவுகின்றது.

  3. நாவல் பழத்தில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே எலும்புகளின் வலிமையினை அதிகரிக்கும்.

  4. நாவல் பழத்தின் இலையை பொடி செய்து, அதனைக் கொண்டு பற்களை துலக்கி வந்தால், ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் இருக்கும்.

  5. தினமும் நாவல் பழம் உட்கொண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் பல்வேறு நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.

  6. வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு, அதில் சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.

  7. நாவல் பழத்தின் இலைகள் மற்றும் மரப்பட்டையை நீரில் போட்டு கொதிக்க விட்டு, பின் அந்த நீரை குடித்து வந்தால் இரத்த அழுத்தம் சீராக இருக்கும்.

  8. சிறுநீரில் கல் இருந்தால் நாவல் பழத்தினை சாப்பிடுவதுடன், அதன் விதையை உலற வைத்து, பொடி செய்து, பின் அதை தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் சிறுநீர்க் கல் கரைந்துவிடும்.

  9. நாவல் பழத்தின் கொட்டையை பொடி செய்து, அதனை நீரில் கலந்து குடிக்கலாம். மற்றும் பழத்தினை ஜூஸ் போட்டு குடித்து வந்தால் இரத்ததில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்.

  10. நாவல் பழத்தில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளது. அதனால் தினமும் நாவல் பழம் உண்பவர்களுக்கு புற்று ஏற்படுவது 30 சதவீதம் குறைவு என பலவித ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


#Novel Fruit #tips