IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

2019 பட்ஜெட் தாக்கலில் முக்கிய தகவல்கள் – நிர்மலா சீத்தாராமன்

6
  • கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2.7 ட்ரில்லியனாக அதிகரிப்பு.
  • நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 3 ட்ரில்லியன் டாலராக இருக்கும்.
  • அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 ட்ரில்லியன் டாலரை எட்டும்.
  • ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை புதிய இந்தியாவிற்கு வித்திட்டது.
  • ஒவ்வொரு துறையையும் டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு நடவடிக்கை.
  • பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க அமைப்புரீதியான சீர்திருத்தங்கள் தேவை .
  • செயல்பாடு, சீர்திருத்தம், முன்னேற்றம் என்ற கொள்கையின் அடிப்படையில் மத்திய அரசு செயல்படுகிறது.
  • ஒரு நாடு ஒரு மின்சார விநியோக அமைப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் சம அளவில் மின்சார விநியோகம் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .
  • சிறு மற்றும் குறு தொழில்களில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதுதான் தற்போது எடுக்கப்பட்டுள்ள முதல் இலக்கு
  • புதிதாக 300 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • எரிபொருளுக்கு மாற்றாக பேட்டரி வாகன உற்பத்தியை அரசு ஊக்குவிக்கும்.
  • நீர் வழிப்போக்குவரத்து மூலம் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த திட்டம்
  • வாடகைக்கு குடியிருப்போருக்கான புதிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும்
  • மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்