Primary Menu

Top Menu

August 15, 18

இரவு ஷிப்ட்களில் பணிபுரிபவர்களுக்கு ஆரோக்கியம் பாதிக்கும்

சென்னை போன்ற பெருநகரங்களில் தற்போது இரவு ஷிப்ட்களில்தான் பணிபுரிகின்றனர். குறிப்பாக ஐடி அலுவலகம், காவல்துறை செக்யூரிட்டி, வாட்ச்மேன் போன்ற பணியில் இருப்பவர்கள் இரவு ஷிப்டை தவிர்க்க முடியாது. இரவு ஷிப்டில் பணிபுரிவது உடல் நலத்திற்கு தீங்குதான்.

இரவு நீண்ட நேரம் தூங்காமல் கண்விழித்து வேலைப்பார்ப்பவர்கள் ஆரோக்கியம் அதிக அளவு பாதிக்கப்பட்டு நோய்கள் ஏற்படும் என புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் ஏற்பட்டுள்ளது. இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் மக்கள் இரவு, பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். இரவு தூங்காமல் கண்விழித்து பணிபுரிவதால் பல நோய்கள் ஏற்படும் என புதிய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் படி, இரவில் வேலைப்பார்க்கும் போது ரத்தத்தில் உள்ள புரோட்டின் அதிகரிக்கிறது. அவை ரத்தத்தில் உள்ள சர்க்கரை, ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கிறது. இதனால் எளிதாக நோய்கள் ஏற்படுகின்றன. இது மற்றவர்களை விட இரவு பணியில் ஈடுபடுவர்களை விட அதிகமாக ஏற்படுகிறது.

இந்த ஆய்வில் மனிதர்களின் ரத்தத்தில் உள்ள புரோட்டின் சோதனை செய்யப்பட்டது. 24 மணி நேரத்தில் தூக்கம், உணவு நேரங்களில் புரோட்டினின் அளவு எவ்வாறு இருக்கிறது என்பதன் மூலம் அறிக்கை வெளியிடப்பட்டது. இது இரவில் வேலைப்பார்ப்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

1. முதலில் இரவு ஷிப்ட்களில் பணிபுரிபவர்கள் பணி முடிந்த பின்னர் டூவீலரில் வீட்டுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். இரவு முழுவதும் தூங்காமல் பணி செய்ததால் வண்டி ஓட்டும்போது தூக்கம் வந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. பஸ், கார், அல்லது கேப் ஆகியவற்றில்தான் வீடு திரும்ப வேண்டும். முடிந்தால் பயணத்தின்போது தூங்கலாம்

2. இரவு ஷிப்ட் பணிபுரிபவர்கள் சூரிய உதயத்திற்கு முன்னர் அதாவது உடலில் வெயில் படுவதற்கு முன்னர் வீட்டிற்கு வந்துவிட வேண்டும். காலை வெயில் உடலில் பட்டால் அப்புறம் தூக்கம் வராது.

3. இரவு ஷிப்ட் முடிந்து வீட்டுக்கு வந்ததும் டிவி பார்ப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். நாளிதழ்களின் தலைப்பு செய்தியை மட்டும் பார்த்து கொள்ளலாம்.

4. இரவு ஷிப்ட்டில் பணிபுரிபவர்கள் வீட்டுக்கு வந்ததும் டீ, காபியை அறவே தவிர்க்க வேண்டும். வேண்டுமென்றால் பால் சாப்பிடலாம்
பின்னர் சில நிமிடங்கள் கழித்து எளிதில் ஜீரணம் ஆகும் இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளை எடுத்து கொள்ளலாம்

5. காலை உணவை முடித்ததும் ஒரு அரை மணி நேரம் ரிலாக்ஸ் செய்துவிட்டு தூங்க செல்ல வேண்டும்

6. படுக்கை அறையில் கண்டிப்பாக இருட்டு இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். கதவு ஜன்னல்களை இறுக்கமாக மூடிவிட வேண்டும். இருளில்தான் டோபமைன் என்ற ஹார்மோன் சுரந்து ஆழ்நிலை தூக்கத்துக்கு வழிவகுக்கும்

7. தூங்கும்போது கண்டிப்பாக செல்போனை அருகில் வைக்க வேண்டாம். அதில் இருந்து வெளிவரும் ரேடியேஷன் உடலுக்குள் பாய்ந்து தூக்கத்தை கெடுக்கும்.

8. தூங்குவதற்கு முன்னர் செல்போனில் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் தேவையில்லாத விவாதங்களை தவிர்ப்பதோடு உடல்நலனும் பாதுகாக்கப்படும்

9. மாலையில் எழுந்து ஃபிரஷ் ஆகி சப்பாத்தி போன்ற உணவை சாப்பிடலாம். அதன் பின்னர் அலுவலகம் செல்வதற்கு முன்னரும் லைட்டாக சாப்பிட்டு கொள்ளலாம்.

10. பணி நாட்களில் அசைவ உணவை தவிர்ப்பது நல்லது. விடுமுறை தினங்களில் அசைவ உணவை சாப்பிட்டு கொள்ளலாம்

Comments
மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

மதுரையும் சிறு தெய்வங்களும்

#மதுரை நகரம் ஒரு காலத்தில் பெரிய கிராமமாக...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon