Primary Menu

Top Menu

September 20, 18

யார் விதைத்தாலும் விதைகள் முளைக்கும்..

கொட்டிக்கிடந்த நாவல்பழம் இன்னைக்கு கிலோ
நூத்தி அறுவது ரூபாய் ..
நினைத்த போதெல்லாம் பறித்து உண்ட சப்போட்டா கிலோ எண்பது ரூபாய் ..
திட்டினாலும் திங்காத மாதுளை கிலோ நூத்தி எண்பது ரூபாய் ..
வீடு தோறும் இருந்த கொய்யா இன்னைக்கு கிலோ அறுவது ரூபாய் ..
வேலியில் படர்ந்து கிடந்தும் பழுக்கும் வரை தீண்டப்படாத கோவைக்காய் கிலோ அறுவது ரூபாய் ..
இறைந்து கிடந்த எலுமிச்சம்பழம் இன்னைக்கு ஒன்னு பத்து ரூபாய் ..
கேட்பாரற்று கிடந்த கொடுக்காப்புளி இன்னைக்கு கிலோ எண்பது ரூபாய் ..
சும்மா கிடந்த பப்பாளி இன்னைக்கு கிலோ நாப்பது ரூபாய் ..
ரூவாக்கு பத்து வித்த நெல்லிக்காய் இன்னைக்கு கிலோ
நூத்தி இருவது ரூபாய்..
தூக்கி எறிந்த சீத்தாப்பழம் இன்னைக்கு கிலோ எண்பது ரூபாய் ..
என்ன பாக்கறீங்க…. உங்களுக்கு இப்போ விவசாயத்தின் உண்மை நிலை புரிந்து இருக்கும்.
இது மட்டும் இல்ல… இந்த விலை பட்டியலில் வேப்பம்பூ , மாம்பூ , மாதுளை பூ , செம்பருத்திப்பூ , நந்தியாவட்டை பூ , மகிழம் பூ மாதிரி மறந்து போன பல
பூக்களின் விலையும் சேர உள்ளது.
மேலும் விரைவில் ஈச்சம்பழம், விளாம்பழம், வேப்பம்பழம், நார்த்தம்பழம், கருவேலங்குச்சி, மருதாணி, வேப்பிலை, வில்வம், மாவிலை, நொச்சி, பவளமல்லி, அருகம்புல் எல்லாம் இந்த விலைபட்டியலில் சேர இருக்கு..
ஆமா…. இதெல்லாம் என்ன விளைவிக்க முடியாத அதிசயப் பொருளா? இவ்வளவு விலை போட்டு வாங்குவதற்கு…
விளைபொருளே இவ்வளவு விலைக்கு விற்கும் பொழுது இதை விளைவித்த விவசாயி எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் இருக்கும் நிலைமை என்ன? அவர்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களின் விலைகள் மட்டும் உச்சத்தில் உள்ளன. ஆனால் அதை விளைவித்த விவசாயி இருக்கும் இடம் தெரியாத இடத்தில் இருக்கிறான்.
எப்படியோ இன்னும் சில வருடங்களில் விளைபொருட்கள் அனைத்தையும் அதிக விலை கொடுத்து தான் வாங்க வேண்டியிருக்கும்.
அப்பொழுது தான் விவசாயிகளின் நினைப்பு நமக்கு வரும். ஆனால் அப்பொழுது இவர் தான் விவசாயி என்று கூறுவதற்கு கூட விவசாயிகள் இருக்க மாட்டார்கள்.
விவசாயத்தின் அழிவையும், விவசாயிகளின் நிலையையும் சற்று நினைத்து பாருங்கள். மேலே விலைபட்டியலில் சொல்லப்பட்ட பொருள்கள் எல்லாம் மந்திரப் பொருட்களோ, அதிசயப்பொருட்களோ அல்ல.
சாதாரணமாக மண்ணில் விளையும் விளைபொருட்கள் தான்.
ஒவ்வொருவருக்குள்ளும் விவசாயி இருக்கிறார். உங்களுக்குள் இருக்கும் விவசாயியை கண்டுபிடித்து வெளிக்கொண்டு வாருங்கள்.
யார் விதைத்தாலும் விதைகள் முளைக்கும்….யார் நட்டாலும் செடிகள் வளரும்…
உங்களால் முடிந்த வரை வீட்டிலேயே வீட்டு தேவைக்காக மரங்களை நட்டு வளருங்கள். வருங்கால நம் சந்ததியினருக்கு இந்த பழங்களாவது கிடைக்கும்.
சந்ததியினருக்கு சொத்து சேர்ப்பது மட்டும் அல்ல நம் கடமை. அவர்கள் வாழ்வதற்கு ஏற்றவாறு இந்த சுற்றுச்சுழலை அமைத்து தருவதும் நம் கடமை தான்…

Comments

அமெரிக்கா போன திரும்ப வரமாட்டீர்கள்…

1. திரும்ப வரமாட்டீர்கள்…

இது கட்டாயம்...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon