Primary Menu

Top Menu

April 26, 18


Trending

திருமண ஆசைகாட்டி பல லட்சம் ரூபாய் பண மோசடி செய்த நடிகை கைது!

தமிழில் ஆடி போன ஆவணி என்ற படத்தில் புது முக நாயகியாக நடித்திருந்தவர் ஸ்ருதி. இவர் கோயம்பத்தூர் பாப்ப நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவராவார். இவர் வெளிநாடுகளில் வேலை செய்யும் இளைஞர்களை குறி வைத்து பல லட்சம் ரூபாய் பண மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
 
ஜெர்மனியில் சாப்ட்வேர் என்ஜினீரியராக பணியாற்றி வருபவர் பாலமுருகன். இவர் திருமண தகவல் இணையதள பக்கத்தில் ஸ்ருதியின் புகைப்படத்தை பார்த்து அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டுள்ளார்.
 
அவரை ஸ்ருதியும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ரூ 41 லட்சம், கிரெடிட் கார்டு ஆகியவற்றை அபேஸ் செய்துள்ளார். இதனையடுத்து பாலமுருகன் சைபர்கிரைம் போலீசில் புகார் அளிக்க அவர்கள் வழக்கு பதிவு செய்து ஸ்ருதியின் குடும்பத்தினரை கைது செய்துள்ளனர்.
 
மேலும் இதற்கு முன்னதாக 2014-ம் ஆண்டிலும் இதே போன்ற புகாரால் ஸ்ருதி கைது செய்யப்பட்டுள்ளார். இது போன்று பல பேரை மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. பின்னர் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மேலும் 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளது.

Latest News