Primary Menu

Top Menu

October 20, 18

100வது நாள் பாணியில் கொலை ! புதுடெல்லியில் பரபரப்பு

புதுடெல்லி துவாரகா பகுதியில் வீட்டைப் புதுப்பிக்கும் பணியில் எலும்புக்கூடு புதைக்கப்பட்டிருந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எலும்புக் கூட்டைக் கண்டு பீதியில் உறைந்த 2 தொழிலாளர்கள் விஷயத்தை வீட்டு உரிமையாளரிடம் தெரிவிக்க அவர் உடனடியாக போலீஸுக்குத் தகவல் அனுப்பினார்.

நீலச்சட்டை அணிந்திருந்த ஒரு நபரின் எலும்புக்கூடு அது. பிப்ரவரி 2016 முதல் காணாமல் போனதாக தேடப்பட்டு வரும் 24 வயது ஜெயப்பிரகாஷ் என்பவரின் எலும்புகூடு அது என்று போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

உடனடியாக போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். ஜெயபிரகாஷின் மாமா தலைமறைவானதும் போலீஸ் தரப்பில் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. ஜெயப்பிரகாஷ் மாமா விஜய் குமார் மஹாரானா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான நூறாவது நாள் திரைப்படத்தில் இதுபோன்றதொரு கொலைக்காட்சி இடம்பெற்றிருக்கும் என்பது ஞாபகமிருக்கும்.

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon