Primary Menu

Top Menu

September 20, 18

நெல்லை தீக்குளிப்பு சம்பவம் : ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி !!

கந்து வட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளித்த இசக்கி முத்து இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழப்பு நான்காக அதிகரித்தது.

நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இரண்டு நாட்களுக்கு முன் இசக்கிமுத்து என்பவர் தனது மனைவி, 2 குழந்தைகளுடன் கந்துவட்டி கொடுமை காரணமாக தீக்குளித்தார். இதில் அவரது மனைவி சுப்புலட்சுமியும், இரண்டு குழந்தைகள் மகள்கள் மதி சரண்யா, அட்சய பரணிகா ஆகியோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் திருநெல்வேலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இசக்கிமுத்துவும் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் மரணமடைந்தார். தீக்குளித்த 4 பேரும் உயிரிழந்த நிலையில் கந்துவட்டிக்கு எதிரான எதிர்ப்புக்குரல் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது.

மேலும் இசக்கிமுத்துவின் இறப்பு சான்றிதழில் கையெழுத்திட அவரது தந்தை மறுப்பு தெரிவித்துள்ளார். இறப்புக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை என இசக்கிமுத்துவின் தந்தை குற்றம் சாட்டினார்.

Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon