IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

நீட் மோசடி: இர்பானை மொரிஷியஸிலிருந்து எவ்வாறு சேலத்திற்கு அழைத்து வரப்பட்டது ?பின்னணித் தகவல்கள்

78


நீட் தேர்வு ஆள்மாறாட்டதில் வாணியம்பாடி டாக்டர் முகமது சபியை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவரது மகன் இர்பான் மொரிஷியஸிலிருந்து நேராக சற்றுமுன் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.


தேனி மருத்துவக்கல்லூரியில் நீட் ஆள்மாறாட்டம் செய்து கைதான மாணவன் உதித் சூர்யாவைத் தொடர்ந்து அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகளின் ஆவணங்களை சரிபார்க்குமாறு உத்தரவிடப்பட்டது. அதன்படி தர்மபுரி மருத்துவக்கல்லூரியில் பயிலும் இர்பான் என்கிற மாணவன் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.


நீட் மோசடி விவகாரத்தைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் ஆவணங்களை சரிபார்க்க தொடங்கிய நாள்முதல் கல்லூரிக்கு வருவதை இர்பான் நிறுத்திக் கொண்டார். மற்றும் விடுதியையும் காலி செய்துவிட்டார். இதனால் இவர் முறைகேடு செய்துதான் கல்லூரியில் சேர்ந்தது உறுதியானது. இர்பான் ஏற்கனவே மொரிஷியஸில் படித்தவர் என்பதால் நீட் விவகாரத்திற்கு பயந்து மொரிஷியஸிற்கு தப்பித்து சென்று விட்டார்.
நீட் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா கைதானது எப்படி?


இர்பானின் தந்தை முகது சபி வாணியம்பாடி, திருப்பத்தூரில் கிளினிக்குகள் நடத்தி வருகிறார். நீட் மோசடி குறித்து சிபிசிஐடி போலீசார் தேடிவருவதை அறிந்து கிளினிக்குகளை மூடிவிட்டு குடும்பத்தினருடன் தலைமறைவாகி விட்டார்.

வேலூர் சிபிசிஐடி போலீசாரின் தீவிர தேடுதலுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு முகமது சபியை வாணியம்பாடியில் வைத்து போலீசார் கைது செய்தனர். விசாரணைக்காக நேற்று அதிகாலை 4 மணிக்கு முகது சபியை தேனிக்கு அழைத்து வந்தனர்.


இந்நிலையில் மோசடியில் ஈடுபட்ட மாணவன் இர்பானை தேடி போலீஸார் மொரிஷியஸ் சென்றதாக நேற்று செய்திகள் பரவிவந்த நிலையில் தற்போது சற்றுமுன் மாணவன் இர்பான் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை காவலில் எடுத்து விசாரிக்கும்போது மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Irfan #Surrender #SalemCourt #In4Net