Primary Menu

Top Menu

September 25, 18

நீட் தேர்வு : மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மசூதியில் ஓய்வு

நீட் தேர்வு எழுத கேரளா சென்றுள்ள தமிழக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் ஓய்வெடுக்க எர்ணாகுளம் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் தங்களின் மசூதிகளில் இடமளித்துள்ளனர்.

வெளி மாநிலங்களுக்கு செல்லும் தமிழக மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. 5 சிறப்பு பேருந்துகள் மூலம் நெல்லையில் இருந்து தமிழக மாணவர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் ஏற்கனவே கேரளா சென்றுள்ள தமிழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கி ஓய்வெடுக்க எர்ணாகுளம் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் தங்களின் மசூதிகளில் இடமளித்துள்ளனர். இதேபோல் தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் தேர்வு மையம் செல்ல கட்டணம் வசூலிக்கப்படாது என கேரள சிஐடியு, சிபிஎம் ஆட்டோ தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

எர்ணாகுளத்திற்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளதாக நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல் தெரிவித்து உள்ளார்.

நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-
எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. உதவி மையங்களை நேரடியாகவும், தொலைபேசியிலும் அணுகலாம்.
90615 18888 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது வாட்ஸ்அப் மற்றும் எஸ்எம்எஸ் மூலமும் தகவல்களை பெறலாம்.
திருநெல்வேலி மாவட்ட நீட் தேர்வு ஒருங்கிணைப்பாளர் எண்கள் – 94438 80161, 73730 42666 என கூறி உள்ளார்
நீட் தேர்வை எழுத செல்லும் தமிழக மாணவர்களுக்காக எர்ணாகுளத்தில் 4 இடங்களில் உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு உதவி மையத்திலும் 10 பேர் உள்ளனர்; 10 பேரில் ஒருவர் தமிழ்மொழி பேசக்கூடியவராக இருப்பார்
எர்ணாகுளம் தெற்கு- 9567466947, 9020606717;
எர்ணாகுளம் வடக்கு- 9048520012, 9895320567
Comments

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon