IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

வசூல்ராஜா படம் மூலம் நீட் ஆள்மாறாட்டத்தை ஆரம்பிச்சவரே கமல்தான்! அமைச்சர் ஜெயக்குமார் கண்டுபிடிப்பு!!

2


நீட் மருத்துவ தேர்வில் ஆள்மாறாட்டத்தை ஆரம்பித்து வைத்தவரே நடிகர் கமல்ஹாசன் தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.


சில நாட்களுக்கு முன் சென்னை லயோலா கல்லூரியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாணவர்களிடம் உரையாற்றினார். அப்போது மாணவர்களிடம் பேசும் போது, அரசியலை பார்த்து மாணவர்கள் ஒதுங்கக் கூடாது. அரசியல் பேசாமல் கல்வி, விவசாயம் முன்னேறாது. கரைவேட்டி கட்டியவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று ஒதுங்கியதால் தான் அரசியலில் கரை படிந்துள்ளது என்றார். அத்துடன் மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கமல் பதிலளித்தார்.


இந்நிலையில் கமலின் கருத்து குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டதற்கு, கமல்ஹாசன் ஒரு இன்ஸ்டன்ட் சாம்பார் மாதிரி. திடீரென வருவார், திடீரென காணாமல் போய்விடுவார். மேலும் தொடர்ந்து பேசுகையில்,


வசூல் ராஜா எம்பிபிஎஸ் படம் மூலம் நீட் ஆள்மாறாட்டத்திற்கு வித்திட்டவரே கமல்தான் என்று தெரிவித்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாச்சார சீரழிவு. அந்த வீட்டிற்குள் என்ன நடக்கிறதே என்று தெரியவில்லை. அது ஒரு அலிபாபா குகை போன்றது என்றார்.


15 வருடங்களுக்கு முன் வெளியான ஒரு படத்தில் நகைச்சுவைக்காக எடுக்கப்பட்ட காட்சியில் வரும் ஒரு நிகழ்வை வைத்து தற்போது ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களின் செயல்பாடுகளை கண்டிக்காமலும் படத்தில் வரும் நிகழ்வை நிஜவாழ்க்கையில் ஒப்பிடுவது தமாஷ் பண்ணுவதாக அமைச்சர் ஜெயக்குமாரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


வருகின்ற நான்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் பணப்பட்டுவாடா அதிகமாக இருப்பதால் வருகின்ற இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#MinisterJayakumar #KamalHassan #VasoolrajaMBBS #In4Net