Primary Menu

Top Menu

September 22, 18

காதலிக்காக விக்னேஷ் சிவன் எழுதிய பாடல் !! – ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு

தமிழில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாரா நடித்து வரும் படத்திற்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் சிறப்பு பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.

‘கோலமாவு கோகிலா’ படத்தை நெல்சன் இயக்குகிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 6 பாடல்களுக்கும் அனிருத் இசையமைத்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இருந்து `எதுவரையோ’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் சிவகார்த்திகேயன் எழுதிய ‘கல்யாண வயசு’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

அடுத்ததாக மூன்றாவது பாடலை வெளியிட இருக்கிறார் அனிருத். இந்த ‘ஒரே ஒரு…’ என்று தொடங்கும் இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதி இருக்கிறார். நாளை இரவு 7 மணிக்கு இந்த பாடலை அனிருத் வெளியிட இருக்கிறார்.
விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலித்து வரும் நிலையில், நயன்தாராவிற்காக இந்த பாடலை அவர் எழுதியிருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #KolamaavuKokila #Nayanthara
தற்போது நான்காவது முறையாக அவருடன் ‘விசுவாசம்’ படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் நயன்தாரா. இயக்குனர் சிவா விசுவாசம் படத்திற்காக நயன்தாராவை அணுகியபோது கதையை கூட கேட்காமல் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். சம்பளம் பற்றி கூட கேட்கவில்லையாம். “நான் பண்றேன். தேதி பிரச்சனை இல்லை. மற்ற படங்கள் தேதியை அட்ஜஸ்ட் பண்ணியாவது இதில் நடிப்பேன்” என கூறினார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
https://www.youtube.com/watch?v=N2Pb47rim5E&t=2s
Comments

அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்

மாடல் அழகியான சாக்‌ஷி அகர்வால், ‘யோகன்’...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon