Primary Menu

Top Menu

October 22, 18

செவ்வாய் கிரகத்தில் தேனீக்களா? – நாசா தகவல்!

செவ்வாய் கிரகத்தில் ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது.

 

செவ்வாய் கிரகத்துக்கு ரோவர் கருவியை நாசா அனுப்பியது. குறித்த ரோவர் கருவியே ஆராய்ச்சிகள் செய்து முடிவுகளை பூமிக்கு அனுப்பி வருகிறது. ஆனால் அது மிக மெதுவாக நகர்ந்து ஆய்வு செய்கிறது. இதனால் பூமிக்கு தகவல்களை அனுப்ப அதிக நேரமாகிறது.

 

அத்துடன் அதிக எரிபொருட்களை எடுத்து கொள்கிறது. மேலும் இது அனுப்பும் தகவல்கள் சில நேரங்களில் சரியாக இருப்பதில்லை. எனவே இந்த கருவியை கைவிட விஞ்ஞானிகள் முடிவெடுத்துள்ளனர்.

 

ரோவர் கருவியை கைவிட்டுவிட்டு அதற்கு பதிலாக ‘ரோபோ’ தேனீக்களை அனுப்ப முடிவு செய்துள்ளனர். இதற்கு ‘மார்ஸ் பீஸ்’ என பெயரிட்டுள்ளனர். இவை 3 முதல் 4 சென்டி மீட்டர் அளவுடையது.

 

இந்த தேனீ ரோபோவில் சிறிய கேமரா, சிறிய சென்சார் என நிறைய வசதிகள் இருக்கும். ஒவ்வொரு தேனீயிலும் ஒவ்வொரு வசதியை ஏற்படுத்தி 20 இற்கும் மேற்பட்ட ‘ரோபோ’ தேனீக்கள் அனுப்பப்பட உள்ளன.

 

இவற்றில் சிறிது நேரம் தான் சார்ஜ் இருக்கும். இதனால் அங்கு இதனுடன் ஒரு ரோவர் அனுப்பப்பட உள்ளது. இதை வைத்து அனைத்து ரோபோக்களுக்கும் ‘சார்ஜ்’ செய்ய முடியும். எரி பொருள் செலவும் மிக குறைவாகும். இந்த ‘ரோபோ’க்கள் இன்னும் 2 வருடங்களில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon