Primary Menu

Top Menu

October 16, 18

நக்கீரன் கோபால் கைது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகண்டனம்!!

நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் திரு. கோபால்அவர்களை இன்று அதிகாலை சென்னை விமானநிலையத்தில் காவல்துறை கைது செய்திருப்பதுவன்மையான கண்டனத்திற்குரியதாகும்.
அருப்புக்கோட்டை, கல்லூரி பேராசிரியர் நிர்மலாதேவி மாணவிகளை பாலியல் வற்புறுத்தல்செய்தது தொடர்பாக  ஆடியோ கேசட்வெளிவருவதற்கு முன்னரே இத்தகையசம்பவத்தை வெளியுலகத்திற்கு தெரிவித்ததுநக்கீரன் பத்திரிகையாகும். அதன் பிறகு அதுதொடர்பான வழக்கு விசாரணை சம்பந்தமாகபல்வேறு கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டுமுறையான விசாரணை நடைபெற வேண்டுமென  நக்கீரன் பத்திரிகை எழுதி வந்தது. இதுதொடர்பாக ஆளுநர் அலுவலகத்திலிருந்துபுகார் வந்த அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக செய்திகள்தெரிவிக்கின்றன. மேலும் வழக்கு பதிவுசெய்வதற்கு முன்னரே அவரை கைது செய்துவிசாரித்து வருகின்றனர்.
உயர் பதவிகளில் உள்ளவர்கள் மீதான புகார்கள்,குற்றச்சாட்டுகள் எழும் போது அதைவெளியுலகத்திற்கு கொண்டு வருவதும், அதன்மீது முறையான நடவடிக்கை எடுக்கவற்புறுத்துவதும் பத்திரிகை சுதந்திரத்தின் உயிர்நாடியாகும். அதை பறிக்கும் வகையில் இன்றுநக்கீரன் கோபால் கைது செய்திருப்பதைமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயற்குழு வன்மையான கண்டனத்தைதெரிவித்துக் கொள்கிறது.
இந்த பிரச்சனையில் ஆளுநர் பெயரும்சம்பந்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானநிலையில், பாரபட்சமற்ற சிபிஐ விசாரணைக்குஉத்தரவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி ஏற்கனவே வலியுறுத்தியிருக்கிறது. உயர்பொறுப்புகளில் இருப்போர் மீது இத்தகையகுற்றச்சாட்டுக்கள் வரும்போது நியாயமானவிசாரணை மூலம் தாங்கள் குற்றமற்றவர்கள்என்று நிரூபிக்க வேண்டிய நிலையில்குற்றச்சாட்டுக்களை முன்வைப்போர் மீதுஇத்தகைய தாக்குதல்கள் தொடுப்பதுஅதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகும்.எனவே, ஆளுநர் தமிழகத்திலிருந்து திரும்பஅழைக்கப்பட வேண்டுமென்கிற கோரிக்கையைமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும்வலியுறுத்துகிறது.
மாணவிகளை பாலியல் வற்புறுத்தலுக்குஉள்ளாக்கிய பிரச்சனையில் உயர்பொறுப்புகளில் இருக்கிற அதிகாரிகள் மற்றும்அரசியல் செல்வாக்குள்ளவர்கள் மீது குற்றவியல்நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பலரும்வற்புறுத்திய நிலையில் இதற்கு நேர்மாறாக, சிபிசிஐடி போலீசார் நிர்மலா தேவி மற்றும்அவருக்கு கீழே பணியாற்றிய இரண்டு துணைபேராசிரியர்களோடு இந்த வழக்கைமுடித்துவிட்டிருப்பது எண்ணற்ற கேள்விகளுக்குஇடமளித்துள்ளது. இந்நிலையில் நக்கீரன்கோபால் கைது செய்யப்பட்டிருப்பது பலஉண்மைகளை மூடி மறைக்க மேற்கொள்ளப்படும்திட்டமிட்ட சதியாகும் என்பதை மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.
தமிழகத்தில் எதிர்கட்சியினர் மற்றும் மக்கள்உரிமைகளுக்காக போராடுகிற பலஅமைப்புகளைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து கைதுசெய்யப்படுவது, அலைக்கழிக்கப்படுவது,சிறையில் அடைக்கப்படுவது அன்றாடநடவடிக்கைகளாக மாறியுள்ளது. மேலும்பத்திரிகையாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதுதொடர்ச்சியான தாக்குதல்கள் அதிகரித்துவருகின்றன. இத்தகைய தாக்குதல்களின் மூலம்தமிழக மக்களின் உரிமை போராட்டங்களைமுடக்கி விட நினைப்பது பகல் கனவாகவே முடியும்என சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
எனவே, கைது செய்யப்பட்ட நக்கீரன் பத்திரிகைஆசிரியர் திரு கோபால் அவர்களை உடனடியாகவிடுதலை செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழகஅரசை வலியுறுத்துகிறது. மேலும் தமிழக அரசின்இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கையைஎதிர்த்து அனைத்து கட்சிகளும், பொதுமக்களும்வலுவான கண்டன குரலெழுப்பவேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகேட்டுக் கொள்கிறது.

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon