IN4NET
IN4NET | Smart Tamil News | Latest Tamil News | Political | Business | Technology | Tamil Articles | Interesting Tamil Stories

கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் தோனியின் ஓய்வு குறித்து விரிவான விளக்கம்

7


தோனியின் ஓய்வு குறித்து பல்வேறு தரப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில் தோனியின் ஓய்வுக்கான உண்மையான நிலவரத்தை தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.


இந்திய அணியில் கிரிக்செட் கடவுள் சச்சினுக்கு பிறகு அதிகளவில் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் விரும்பப்படுபவர் மகேந்திர சிங் தோனி. தோனி கிரிக்கெட்டில் அறிமுகமானதிலிருந்து இன்றுவரை அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


தற்போது தோனியின் ஓய்வு குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வந்துள்ள நிலையில் தோனியின் ஓய்வுகுறித்து பரபரப்படும் செய்தியில் உண்மையில்லை என்று இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறியுள்ளார்.


கேப்டன் விராத் கோலி தனது ட்விட்டர் தளத்தில் 2016ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி குறித்து குறிப்பிட்டிருந்தார். தோனியுடன் விராத் கோலியும் வெற்றிக் களிப்பில் இருப்பதுபோல் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.


மேலும் அதனுடன் இந்தப்போட்டியை என்னால் மறக்க முடியாத ஒருபோட்டி. மேலும் இன்றைய இரவு ஸ்பெஷலானது. பிட்னஸ் தேர்வைப் போல் தோனி என்னை ஓட வைத்தார் என ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார்.


விராத் கோலியின் இந்தப்பதிவை பார்த்த ரசிகர்கள், தோனியின் ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார் என்பதை உணர்த்தும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் புரிந்து கொண்டனர். மேலும் கோலியின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பினை டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர். மற்றும் தோனி தன்னுடைய ஓய்வு அறிவிப்பை தற்போது வெளியிட வேண்டாம் என்று ரசிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


தோனியை புறக்கணிக்கிறதா இந்திய அணி ?

இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்து தற்போதுவரை எந்தவொரு தகவலையும் எவரும் அறிவிக்கவில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்களின் விபரத்தை அறிவிக்கும் போது இந்த கருத்தை தெரிவித்தார்.


எம்.எஸ்.தோனி டெஸ்ட் போட்டிகளிலிருந்து 2014ம் ஆண்டு முதல் ஓய்வு பெற்றுள்ளார். தற்போது டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்திய அணிக்கு இரண்டு முறை உலகக்கோப்பை பெற்றுக்கொடுத்த ஒரே கேப்டன் தோனி என்பது குறிப்பிடத்தக்கது.
#MSDhoni #Retirement #Announces #In4Net