Primary Menu

Top Menu

May 21, 18

அப்பா, மகன் நடித்திருக்கும் Mr.சந்திரமௌலி ட்ரைலர் !!

இயக்குநர் திரு இயக்கத்தில் கார்த்திக், கெளதம் கார்த்திக் இணைந்து நடித்திருக்கும் படம் `மிஸ்டர்.சந்திரமெளலி’.

முதன் முறையாக அப்பாவும் மகனும் சேர்ந்து  நடித்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.   மேலும், ரெஜினா, வரலட்சுமி சரத்குமார், சதீஷ், மகேந்திரன் என ஒரு பட்டாளமே நடித்துள்ள இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். பாக்ஸராக வரும் கெளதம் கார்த்திக், அப்பா கார்த்திக்கின் மீதான பாசம் என டிரெயிலர் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

ரெஜினா இந்தப் படத்தில் க்ளாமராக நடித்திருக்கும் போட்டோக்கள் ஏற்கெனவே இணையத்தில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது. போஃப்டா தனஞ்செயன் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெயிலரை மாதவன் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Vaishali

Author of In4 Network from past 3 years, News and Articles with Genre of Cinema, Political, Sports, Business and General in the level of content is Tamilnadu, India and also Globally.

தன்னை பற்றிய கிசுகிசுக்குகள் குறித்து நடிகை அமலாபால்

தன்னை பற்றி எந்தவித கிசுகிசுக்குக்கள்...

Leave a Reply