Primary Menu

Top Menu

June 23, 18

10 வயது சிறுவன் கொலை: தாயின் கள்ளக்காதலன் வெறிச்செயல்

சென்னை எம்ஜிஆர் நகரை அடுத்த நெசப்பாக்கம் பாரதி நகரில் வசிப்பவர் கார்த்திகேயன் (38). வீடுகளுக்கு உள் அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (34) சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் பணியாற்றுகிறார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.  9 வயதில் ரித்தேஸ் சாய் என்ற மகன் இருந்தார். இவர் அருகிலுள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்களுக்கு நாகராஜ் என்ற இளைஞர் நட்பாகி உள்ளார். நாகராஜின் நட்பு தினசரி வீட்டுக்கு வந்துசெல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளது. நாளடைவில் நாகராஜுக்கும் மஞ்சுளாவுக்கும் வளர்ந்த நட்பு  , கள்ள தொடர்பாக மாறியுள்ளது.

கார்த்திகேயன் இந்திய டியூசனுக்கு அழைத்து சென்றார். பின்னர் இரவு 8.30 மணியளவில் மீண்டும் அழைத்து வர சென்றார். ஆனால் டியூசன் வகுப்பில் ரித்தேஷ் சாய் இல்லை. அவனை எங்கே என்று விசாரித்த போது கண்ணில் சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி நாகராஜ் என்பவர் ஏற்கனவே அழைத்து சென்றதாக தெரிவித்தனர்.

பயந்துபோன கார்த்திகேயன், தனது மகனைக் காணவில்லை என்றும், மனைவியின் நண்பர் நாகராஜ்தான் தன் மகனை கடத்திச் சென்றதாகவும் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் கடத்தப்பட்ட சிறுவனை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினார்கள்.  வேலூர் பஸ் நிலையத்தில் நாகராஜை போலீசார் மடக்கி பிடித்தனர். அவனை சென்னைக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினார்கள்.

போலீஸ்  நாகராஜிடம்  நடத்திய விசாரணையில் தங்களது நட்புக்கு ரித்தேஷ் தடையாக இருந்ததால் அவரைக் கொலை செய்ய திட்டமிட்டதாகவும்  மது போதையில் மதுபாட்டிலை உடைத்து சிறுவன் தலையில் தாக்கி கொன்றதாகவும் தெரிவித்தான்.
எனக்கும், கார்த்திகேயன் மனைவி மஞ்சுளாவுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. நாங்கள் இருவரும் பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளோம். சிறுவன் ரித்தேஷ் சாயை நான் பலமுறை டியூசனில் இருந்து அழைத்து சென்று மஞ்சுளாவின் வீட்டில் விட்டிருக்கிறேன்.

எங்கள் கள்ளக்காதல் கார்த்திகேயனுக்கு தெரிய வந்தது. அவர் இதை கண்டித்தார். ஆனால் நாங்கள் தொடர்பை துண்டிக்கவில்லை. கார்த்திகேயன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு என் மீது எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து என்னை ஜெயிலுக்கு அனுப்பினார்.

இதனால் மனம் உடைந்த நான் அவரை பழிவாங்க சிறுவன் ரித்தேஷ் சாயை கொலை செய்ய முடிவு செய்தேன்.  இவ்வாறு நாகராஜ் போலீசிடம் கூறினார். அவரை கைது செய்த போலீஸார், இந்த கொலையில் சிறுவனின் தாய் மஞ்சுளாவுக்கும் தொடர்பு இருக்கிறதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply